தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 அக்டோபர், 2017

பத்து தலை ராவணனை கடவுளாக வணங்கும் கிராமம்: காரணம் என்ன?


மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா மாட்டத்தில் உள்ள சங்கோலா எனும் கிராமத்தில் உள்ள மக்கள் பத்து தலை ராவணனை கடவுளாக வணங்கி வருகின்றனர்.

ராவணனை இலங்கையை ஆண்ட அசுரகுல அரசன் என்று கூறுகிறது ராமாயணம். ஆனால் அவனோ இயற்கை எழில் கொஞ்சும் இலங்கைத் தீவை செல்வ செழிப்பாக ஆட்சி புரிந்து வந்தவன்.

ராவணனை தமிழ் மன்னன், நீதி தவறாதவன் என்றும் வரலாற்றுக் கதைகள் சில தென் தமிழ்நாட்டில் பரவியுள்ளது.

அதே நேரத்தில் ராவணனை கொன்ற தினத்தை கொண்டாடுபவர்களும் இருக்கின்றனர்.ராமயணம் அடிப்படையில் பார்த்தால், ராவணன் தங்கை சொல் தவறாத அண்ணன், தனது தங்கைக்காக அனைத்தையும் செய்தார் என்று கூறப்படுகிறது.

அதனால் தங்கை சொல் தட்டாத அண்ணன் என்று ராவணனை போற்றி இந்த கிராமத்து மக்கள் வணங்குகின்றனர்.
ராவணன் என்பவன் அடிப்படையில் ஒரு சிவபக்தன், அவன் செய்த செயல்களுக்கு தண்டனை கிடைக்கப் பெற்றது.
அதற்காக ஒவ்வொரு முறையும் வதம் செய்து பழிதீர்க்க வேண்டியதில்லை என்பது இம்மக்களின் வாதமாக உள்ளது.

ராமனின் தம்பி லட்சுமணன் ராவணன் தங்கையின் மூக்கை அறுத்து அவமானப்படுத்தியதால் தான் ராவணன் சீதையை கடத்திச் சென்றான்.

அதனால் ராவணனும் நம் கடவுள் தான் என்று கூறி, ராவணனின் பத்து தலையுடன் உள்ள சிலை ஒன்றை வைத்து இந்த கிராம மக்கள் பூஜை செய்து வருகின்றனர்.

இந்த கோவிலின் பூசாரியான லக்டே என்பவர் கனவில் ராவணன் தோன்றி குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு சிலை இருப்பதாகவும், அதை கோயிலாக கட்டி வழிபடுமாறும் கூறினாராம்.

அதனால் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ராவணன் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

http://news.lankasri.com/history/03/134004

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக