இந்தியாவின் மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக் கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோயில் மலைப் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டது.
8-ஆம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இக்கோயில், திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும், பல்லவ கலை பண்புகளையும் கொண்டுள்ள வித்தியாசமான கட்டமைப்பாக விளங்குகிறது.
ஆனால் இக்கோவிலை கட்டியது யார் என்பது மட்டும் சரியான ஆதாரங்களுடன் விவரிக்கப்படவில்லை.
இந்த கோவில் முழுமையான ஆலயம் ஒன்றின் அம்சங்களைக் கொண்ட பிரம்மாண்டமான மலைத்தளியாக காட்சியளிக்கின்றது.
அந்த பிரம்மாண்டத்தின் பின்னால் இந்த எல்லோரா கைலாசநாதர் கோவிலானது பல ரகசியங்களையும் புதைத்து வைத்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய நாகரீகங்கள், மிகவும் மேம்பட்ட மற்றும் அதிநவீன தத்துவமாக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது.
அதை சுட்டிக்காட்டும் பண்டைய தளங்களில் மிகவும் பலமான ஆதாரமாக இக்கோவில் திகழ்கிறது.
இங்குள்ள 34 குகைகளும் ஹிந்து, புத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளையும், அதன் பெருமைகளையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது.
இதில் முதல் 12 குகைகள் புத்த கோயில்களாகவும், அடுத்த 17 குகைகள் ஹிந்து கோயில்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மீதம் உள்ள 5 குகைகளும் சமண மரபின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைக்கிறது.
இந்தியாவில் மட்டுமின்றி மற்றும் வெளிநாடுகளில் உள்ள வரலாற்று ஆசிரியர்கள் உட்பட 400,000 டன் எடை அளவிலான பாறைகளை அகற்றி, வெறும் 18 ஆண்டுகளில் இம்மாதிரியான கோவிலை கட்டி முடிப்பது மனிதர்களால் முடியாத காரியமென்று கூறுகின்றனர்.
இப்படி ஒரு அதிசயத்தைக் கண்ட அவுரங்கசீப் கைலாச கோவிலை இடித்து நொறுக்க கட்டளையிட்டுள்ளார்.
அதனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடிப்பு வேலையை நிகழ்த்த அவர் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்பியுள்ளார்.
ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக இரவும் பகலும் வேலை செய்தும் கூட கைலாச கோவிலின் சில சிலைகளை மட்டுமே அவர்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. அதன் கட்டமைப்பை நுனியும் அசைக்க முடியவில்லையாம்.
http://news.lankasri.com/history/03/135154
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக