தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 29, 2017

விபரீத ராஜ யோகம்: 12 ராசியில் யாருக்கு அமையும்?


ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளிலும் 9 கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளை பொறுத்தும், இணைந்திருக்கும் கிரகங்களை பொறுத்தும் ஒருவருக்கு கிடைக்கும் யோகங்கள், நன்மைகள் மற்றும் தீமைகள் அமையும்.
யோகங்களில் பல வகை உண்டு. ஒரு ஜாதகத்தில் கெட்ட கிரகம் ஒன்று கெட்டுபோய் இருந்தால், அது ராஜயோகமாக மாறி நல்ல பலனைக் அள்ளிக் கொடுக்கும்.
ராஜயோகம் யாருக்கு எப்படி அமையும்?
உதாரணமாக, கன்னியா லக்கினத்திற்கு செவ்வாய் 3 மற்றும் 8-ஆம் வீட்டிற்கு அதிபதி என்பதால் அவர் கெட்டவர்.
ஆனால் அப்படி கெட்டவரான அவர், ஜாதகத்தில் 6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால் கெட்டுப்போய் அல்லது மறைந்துபோய் விடுவார்.
அப்படி மறைந்துபோன அவர், தன் தசா, புக்திக் காலங்களில் கெடுதல் செய்வதற்கு பதிலாக நன்மையே செய்வார்.
அதேபோல் மீன லக்னத்திற்கு, சுக்கிரன் 3 மற்றும் 8-ஆம் வீட்டிற்கு அதிபதி. அதனால் அவர் கெட்டவர். ஆனால் கெட்டவரான சுக்கிரன் 3, 6, 8, 12 ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றில் மறைந்து இருந்தால், அவர் ராஜயோகத்தை கொடுப்பவராகிறார்.
இப்படி கிடைக்கும் யோகத்தை தான் ஜோதிட ரீதியாக ராஜயோகம் என்று கூறப்படுகிறது.
விபரீத ராஜயோகம் யாருக்கு அமையும்?
சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரமான பூரத்தில் இருக்கிறார். ஆக, அவர் 6-ம் வீட்டு பலனை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
சுக்கிரன் 3 மற்றும் 8-ஆம் வீடுகளுக்கு அதிபதி, ஆகவே 3, 6, 8 ஆகிய வீடுகளின் பலனை அவர் கொடுத்து விடுவார்.
ஆனால் எந்த கிரகமும், எந்த நட்சத்திர காலில் இருக்கிறார், அவர் யாரால் பார்க்கப்படுகிறார் என்பதை அனைத்தும் பார்க்காமல் பலன் கூறினால் அது சிறப்பாக அமையாது.
இதேபோல் பல ஜாதகங்களில் இந்த விபரீத ராஜயோகம் நன்மைக்கு பதிலாக தீமைகளையும் செய்யும்.

http://news.lankasri.com/astrology/03/135586

No comments:

Post a Comment