இமயமலையில் மட்டுமே பூக்கக் கூடிய அரிய வகை மலரான பிரம்மகமலம் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பூத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மலரும் பிரம்மகமலம் பூவை இமயமலையில் மட்டுமே காண முடியும்.
பிரம்மன் படுத்து உறங்குவது போல இதன் அமைப்பு காணப்படுவதால் இது ‘பிரம்மகமலம்’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் சிறப்பு என்னவென்றால் இதன் ஒரு இலையை மட்டும் பிடுங்கி நட்டு வைத்தாலே செடியாக வளரக்கூடியது.
கள்ளி வகையைச் சேர்ந்ததால் இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. வெண்மை நிறத்தில் பளிச்சிடும் இந்த மலரின் மணம் வெகுதூரம் பரவக்கூடியது.
Benzyl Salicylate என்னும் வேதிப்பொருளே இதன் மணத்திற்கு காரணம். பிரம்மகமலம் இரவில் மலர்ந்து காலையில் வாடிவிடும் தன்மை கொண்டது.
கம்பம் பகுதியில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அய்யாதுரை என்பவரின் வீட்டில் இந்த பூ பூத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், ’நண்பர் ஒருவர் மூலமாக இந்த பூவைப் பற்றி தெரிந்துகொண்டு எனது வீட்டில் நட்டு வைத்தேன்.
ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் பூக்க ஆரம்பித்தது. இதன் மணம் மன அமைதியை தருவதால் இதனை தினமும் வழிபட்டு வருகிறேன்’ என்றார்.
ஜப்பானியர்கள் இந்த பூவை ‘Beauty under the moon' என்று அழைக்கின்றனர்.
http://news.lankasri.com/india/03/135323
Sir ,Oru leafs kidaikuma
பதிலளிநீக்குNanum theni that sir
பதிலளிநீக்கு