தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, October 30, 2017

கடவுளாக வணங்கப்பட்ட மூதேவி: மறைக்கப்பட்ட பின்னணி தெரியுமா?


செல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்பதமாக திணிக்கப்பட்ட பெயர் தான் மூதேவி.

இந்த பெயரை பெரும்பாலும் அனைவரும் திட்டுவதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் மூதேவி யார் அவரின் சிறப்புக்கள் தமிழரை எவ்வளவு பெருமைபடுத்துகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம்.
முதேவியின் அர்த்தம் மற்றும் சிறப்புகள் என்ன?
மூதேவி என்பதற்கு அமங்கலமானவள், சோம்பேறி, எதற்கும் உதவாதவள் என்பதே பொருளாக கருதப்படுகிறது.

ஆனால் இந்த மூதேவியை நம் முன்னோர்கள் அனுதினமும் குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனராம்.

பெண் தெய்வங்களுள் ஒருவரான தவ்வையை மூதேவி, ஜோஷ்டா தேவி, மூத்தோள் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆனால் பலரும் இவரை துரதிஷ்டத்தின் கடவுளாக திரித்து விட்டதாக நம்புகின்றனர். இந்த தவ்வை என்னும் மூதேவி சனீஸ்வரனின் மனைவியாகவும் போற்றப்படுகிறார்.

கொற்றவை எனும் காளிக்கு பின் தவ்வை எனும் சொல் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகிறது. நெல்லாக கருதப்படும் திருமகளுக்கு அக்காவாக மூதேவி உரமாக இருக்கிறார் என்கிறது ஆன்மீகம்.
ஆனால், தமிழரிஞர்களின் பார்வையில் மூத்ததேவி ஒரு காலத்தில் அவ்வையைப் போல பெரும்புலவராக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

பல தவ்வை சிலைகள் விவசாய நிலங்களில் அதற்கு அருகாமையில் கிடைக்கப் பெற்றவை. அதனால் தவ்வை உழவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எப்படி எமனை எதிர்பதமான தெய்வமாக கட்டமைத்தார்களோ, அதன்படியே மூதேவியையும் எதிர்மறையாக சோம்பேறியாக ஆக்கிவிட்டனர் என்று தமிழ் மீது பற்றுகொண்ட சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

உண்மையில் மூதேவி என்பவர் கடவுள் அல்ல புலவர் என்பது இவர்களுடைய வாதமாக உள்ளது. ஆனால் பல இடங்களில் தவ்வையின் கோயில்கள் உள்ளது.


http://news.lankasri.com/history/03/135661

No comments:

Post a Comment