தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 20, 2017

ஒருவழியாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது..!


மனித வாழ்க்கை சார்ந்த ஆயிரமாயிரம் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டாலும், மனிதனின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது..? என்னவாகும்..? என்ற மர்மமான அதே சமயம் சுவாரசியமான கேள்விக்கு நிகராக எந்த ஆய்வும் இல்லை என்பதே நிதர்சனம்.
அப்படியான ஒரு தேடுதலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வின் படி , இறந்த பிறகு என்னவாகும் என்ற கேள்விக்கான விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!
4 ஆண்டு :
பிரிட்டன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வாளர்கள் அணி மாரடைப்பு நோயாளிகளை தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.
40 சதவீதம் பேர் :
மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், மருத்துவ ரீதியாக அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிவித்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் “விழிப்புணர்வில்” இருந்ததாகவும் சில வடிவங்கள் கண்டதாகவும் விவரித்துள்ளனர்.
20 முதல் 30 நொடிகளில் :
நிபுணர்கள்படி, இதய துடிப்பு நின்ற அடுத்த 20 முதல் 30 நொடிகளில் மூளை இயக்கம் நின்று போகும், அதன் பின்பு எதை பற்றிய விழிப்புணர்விற்கும் சாத்தியமே இல்லை .
குழப்பம் :
அப்படியிருக்க உயிர்பிழைத்தவர்கள் கூறும் அந்த விழிப்புணர்வு என்பது என்ன..? எதை பற்றிய எச்சரிக்கையாக அது இருக்க வேண்டும்..? என்ற குழப்பம் எழுந்தது.
மூன்று நிமிடங்கள் வரை :
சமீபத்திய ஆய்வின் மூலம் மருத்துவ ரீதியான இறப்பிற்கு பின்னர் நோயாளிகள் மூன்று நிமிடங்கள் வரையிலாக உண்மையான நிகழ்வுகள் ஏற்படுவதை உணர்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு முறை மட்டுமே :
உடன் நோயாளிகள் புத்துயிரளிக்கப்பட்ட பின்பு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றிய நினைவை துல்லியமாக பெறுகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புதியதொரு கோணம் :
பொதுவாக இதுபோன்ற ஆய்வுகளில் உருவெளித்தோற்ற நிகழ்வுகளை மட்டுமே நோயாளிகள் காண்பார்கள் ஆனால் சமீபத்திய ஆய்வு முற்றிலும் புதியதொரு கோணத்தை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் நியூயார்க்கின் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை முன் நடத்துபவருமான டாக்டர் சாம் பரினா.
நோயாளி :
இந்த ஆய்வில் ஒரு நோயாளியை மீள் உயிர் பெற வைக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சி செய்த போது அவர் (நோயாளி) என்ன நடக்கிறது என்ற ஒரு “மிகவும் நம்பகத்தனமான” தகவலை அளித்துள்ளார்.
அறையின் ஒரு மூலையில் :
அதாவது மருத்துவ அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு நான் சுவாசம் செய்துகொண்டிருந்தை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
விழிப்புணர்வு நிலை :
வழக்கமாக இதயம் நின்ற பின்பு மூளை செயல்பட முடியாது. ஆனால், இந்த விஷயத்தில், விழிப்புணர்வு நிலை சுமார் மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்துள்ளது.
2060 நோயாளிகள் :
இதன் மூலம் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை ஒன்று இருப்பதின் துப்பு கிடைக்கப் பட்டுள்ளதாகவே கருதப் படுகிறது. இந்த ஆய்வில் இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மருத்துவமனைகளில் இருந்து 2,060 நோயாளிகள் உட்படுத்தபட்டுள்ளனர்.
46 சதவீதம் :
அவர்களில் உயிர் பிழைத்த 46 சதவீதம் பேர் ஒரு பரந்த அளவிலான மன நினைவுகளின் அனுபவம் பெற்றுள்ளனர்.
2% பேர் :
அவர்களில் ஒன்பது சதவீதம் மரணத்தின் அருகாமை அனுபவத்தின் பாரம்பரிய வரையறைகளை அனுபவித்துள்ளனர், 2% பேர் உடலுக்கு வெளியே உள்ள அனுபவங்களை அதாவது தன் உடலை தானே பார்ப்பது போன்ற வெளிப்படையான விழிப்புணர்வு நிகழ்வுகளை அனுபவித்துள்ளனர்.

http://www.manithan.com/living/04/145991

No comments:

Post a Comment