தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 29, 2017

கர்ப்ப காலத்தில் இந்த இடத்திற்கு சென்று விடாதீர்கள்


கர்ப்பக் காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அதேநேரத்தில் கர்ப்பக் காலத்தில் பெண்கள் வெளியிடங்களுக்கு அதிகமாக பயணம் செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அதற்காக வீட்டிற்குள்ளயே அடைந்து கிடக்கவும் கூடாது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை நடந்து செல்லலாம்.
மேலும் சாலை அல்லது விமானம் வழி பயணமாக இருந்தாலும் தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் அதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.
கர்ப்பிணிகள் நீண்டதூர பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு?
  • கர்ப்பிணிகள் பயணம் செய்யும் போது வெளியில் உள்ள கழிப்பிடம் சுகாதாரமற்றதாக இருப்பதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்ற காரணத்தினால் ஏற்படும் நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.
  • கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வதால் பெண்களுக்கு அதிக களைப்பு உணர்வை உண்டாக்கும்.
  • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்தால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம்.

No comments:

Post a Comment