தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 அக்டோபர், 2017

ஸ்பூனை நாக்கில் வைத்து 1 நிமிடம் தேய்த்தால் இதையெல்லாம் தெரிஞ்சிக்கலாம்


நம் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நிமிடம் போதும். அதாவது சாப்பிட பயன்படுத்தும் ஸ்பூனின் அடிப்பகுதியினை கொண்டு நாக்கின் மீது தேய்க்க வேண்டும்.
பின் அந்த ஸ்பூனை ஒரு கண்ணாடி போன்ற பாலிதீன் பையில் போட்டு மேஜை விளக்கின் அடியில் வைக்க வேண்டும்.
ஒரு நிமிடத்திற்கு பின் ஸ்பூனின் அடிப்பகுதி எவ்வித கறை அல்லது மணமின்றி காணப்பட்டால், அது உங்கள் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. உடலில் உள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்.
அதை தவிர்த்து வேறு சில அறிகுறிகள் தென்பட்டால், அது எவ்விதமான நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்துகிறது என்பதை பார்க்கலாம்.
ஸ்பூன் உணர்த்தும் அறிகுறிகள்?
  • ஸ்பூனில் ஒருவித நாற்றம் ஏற்பட்டால், அது நுரையீரல் அல்லது வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
  • ஸ்பூனில் இனிப்பின் மணம் வந்தால், அது நீரிழிவு நோயையும், அம்மோனியாவின் மணம் வந்தால், அது சிறுநீரக பிரச்சனை உள்ளதையும் குறிக்கிறது.
  • ஸ்பூனில் மணம் மட்டுமில்லாமல், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் கறைகள் இருந்தால், அது தைராய்டு சுரப்பியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறிக்கும்.
  • ஸ்பூன் நீல நிறத்தில் இருந்தால், அது கொழுப்பின் அளவு அதிகமாகவும், ரத்த ஓட்டம் உடலில் குறைவாகவும் உள்ளது என்று அர்த்தம்.
  • ஸ்பூன் வெள்ளை நிறத்தில் இருந்தால், அது சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள தொற்றினை குறிக்கிறது.
  • ஸ்பூனில் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

http://www.manithan.com/health/04/147550

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக