தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, December 13, 2015

கணக்கு விநாயகர் ஆலயம் !
முதலாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட சோழமன்னர்களில், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் இந்த இரண்டு மன்னர்களும் மிக சிறந்த பேரரசர்கள். இவர்களில் ராஜேந்திர சோழ மன்னனால் ஏற்படுத்தப்பட்ட நகரம் கங்கை கொண்ட சோழபுரம். சோழர் காலத்தில் இந்த நகரம் நம்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் தலைநகரமாக விளங்கியது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் கணக்கு விநாயகர் என்ற விநாயகர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இது ராஜேந்திரசோழனால் உருவாக்கப்பட்டது. தன் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள இந்த விநாயகரைத் தான் மன்னர் தினமும் வணங்கி வந்துள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய கோவில் கட்டிய காலத்தின் கோபுரம் கட்டிய செலவை சரியாக மந்திரியால் சொல்ல முடியவில்லை. அந்த கணக்கை மந்திரிக்கு இரவோடு இரவாக வந்து சரியாக சொன்னதால் இந்த விநாயகருக்கு கணக்கு விநாயகர் என்று பெயர் வந்ததாக புராணம் கூறுகிறது.

இது ஒரு அற்புதமான சிலையாகும். இந்த ஆலயத்தில் விநாயகர், துர்கை, நவகிரகம் உலகம்புகழ் பெற்றவையாகும்.

இந்த விநாயகர் சிலை இலங்கையில் இருந்து கொண்டு வந்திரிக்கப் படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment