தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 டிசம்பர், 2015

மெட்டி அணிவது ஏன் ?!


மெட்டி அணிவது ஏன் என்று தெரியாமல் வெறும் சம்பிரதாயமாகவே அதனை பார்க்கின்றோம். ஆனால் அதற்கு பின்னால் தமிழனின் அறிவியல் ஒளிந்திருக்கிறது...
திருமணமான இந்து பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் பெண்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும் போது மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். தற்பொழுது மயக்கம் ஏற்பட்டால் உடனே பெண்களை படுக்க வைத்து அவரின் கால் விரல்களை இறுக்கி பிடித்து கொண்டு உள்ளங்காலை தேய்ப்பார்கள்.
ஏனெனில் கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும் மயக்கம் சோர்வு போகும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள்.
காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோ, சோர்வு, மயக்கம் போன்றவற்றை குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
அதுமட்டுமா?? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது. இதனாலயே வெள்ளியில் மெட்டி அணியப்படுகிறது.[படித்ததில் பிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக