தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, December 14, 2015

இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் நேதாஜி !


இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் நேதாஜி பங்கேற்றதற்கான புகைப்பட ஆதாரங்கள் அவரது மர்ம மரணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேதாஜி குறித்து ஆய்வு நடத்தி வரும் அமைப்பு ஒன்று பிரித்தானியாவின் தடயவியல் நிபுணருடன் இணைந்து நடத்திய சிறப்பு ஆய்வின் முடிவில் இந்த புதிய தகவல்கள் கிட்டியுள்ளது.
கடந்த 1966 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியுடன் இந்தியா பாகிஸ்தான் அமைதிப் பேச்சு வார்த்தையில் நேதாஜியும் பங்கேற்றுள்ளதாக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
இந்த சிறப்பு ஆய்வில் கலந்துகொண்ட பிரித்தானியாவின் தடயவியல் நிபுணர் நீல் மில்லர், முன்னாள் பிரதமருடன் புகைப்படத்தில் இருக்கும் அந்த நபர் கண்டிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
Face-mapping முறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் உண்மைத்தன்மை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் சாஸ்திரியின் உறவினர், தாஷ்கண்ட் சந்திப்பின் போது நேதாஜியும் சாஸ்திரியும் நேரிடையாக பேசியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தாஷ்கண்ட் அமைதி பேச்சு வார்த்தையின் போதுதான் பிரதமர் சாஸ்திரி மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment