தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 டிசம்பர், 2015

ஆண்களுக்கான சமாச்சாரம்! ஒருதடவை முயற்சித்து பாருங்கள்!

தக்காளி சூப் குடிப்பது ஆண்களின் விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.தினமும் ஒரு கப் சூப் குடிப்பதால் விந்தணுக்கள் அதிக சக்தி பெற்றுவிடும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்பது போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவு.
லைக்கோப்பென் கான்சர் நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது கான்சரிலிருந்து பாதுகாக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது இந்த புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.
நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையில் இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருக்கும் தகவல் ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்திருக்கிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக