தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, December 10, 2015

நீங்கள் கூலான ஆண்களா? அப்படியென்றால் பெண்கள் விரும்புவார்கள்!

சச்சரவுகள், சமாதானங்கள் நிறைந்ததே வாழ்க்கையாகும், ஒருவர் சண்டையிட்டால் மற்றவர் சமாதானப்படுத்த வேண்டும்.இருவரும் ஒரே குணங்களை கொண்டு வாழ்க்கையை நடத்தினால் அதில் ஒரு சுவாரசியமும் இருக்காது.
பொதுவாக, பொறுமையாக இருக்கும் பெண்கள் என்றால் ஆண்களுக்கு பிடிக்கும், அதே போன்று பெண்களும், தங்களது குணத்திற்கும், பண்பிற்கும் எதிர்மறையாக இருக்கும் ஆண்களை தான் விரும்புவார்கள்.
இவ்வாறு வெவ்வேறு ரசனைகள் ஒன்றாக இணைந்தால் தான், வாழ்வு ஒளிமயமாகும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நமது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஓர் நபர் தான் நமது வாழ்க்கைத்துணையாக துணையாக இருக்க முடியும்.
அந்த வகையில், எவ்வித பிரச்சனைகளையும் கூலாக எடுத்துக்கொள்ளும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.
பெண்கள் பொதுவாகவே கோவம் அதிகம் கொள்பவர்கள்.
இதில், ஆணும் தீயாக கொந்தளிக்கும் குணம் கொண்டிருந்தால் வீடு தாங்காது. பெண்களை ஒருநாளும் ஆண்களால் முழுதாய் கட்டுப்படுத்த முடியாது.
ஆனால், ஓர் பெண்ணால் ஆணை ஓர் பார்வையில், கட்டுப்படுத்த முடியும். ஆண்கள் என்னதான் அறிவுத்திறன் அதிகம் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டால் கூட உடைந்து போய்விடுவார்கள்.
எனவே, இந்த நேரங்களில் ஆண்கள் தங்களை தாங்களே கூலாக்கி கொள்ள வேண்டும். மேலும் ஆண்களே... திருமண வாழ்வில் நேர்மையாக இருங்கள், ஏனெனில் இந்த நேர்மை தான் உங்கள் துணையின் மனதில் நச்சென்று நங்கூரம் போன்று இருக்கும்.
மேலும், உங்கள் மனைவி/ காதலி செய்யும் எவ்வித பிரச்சனைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அதனை சரியான முறையில் கையாண்டால், உங்கள் துணை காதல் மழை பொழிவது நிச்சயம்.

No comments:

Post a Comment