தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, December 12, 2015

தோழர் இரத்தினசபாபதியை நினைவு கொள்வோம்.....


'மறத்தல்' என்பது , அதிகாரத்தின் ஒரு வடிவம். 

தனக்கான "வரலாற்றை" புனைய அது செய்யும் சதி....


தோழர் இரத்தினசபாபதியை நினைவு கொள்வோம்......

(1938 - டிசம்பர் 12, 2006),

"""""""""""""""""""""""""""""""""""""""""""

1988 ஆம் ஆண்டு வரையில் ஈழத்தில் செயற்பட்ட ஈழப்போராட்ட இயக்கமான ஈரோஸ் என்ற ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் அமைப்பை நிறுவியவர்.

1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இணுவில் கிராமத்தில் பிறந்த இளையதம்பி இரத்தினசபாபதி பத்திரிகைத்துறையிலும், இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்து வந்த போதும், மார்க்சியசிந்தனையிலும், இலங்கைத் தமிழர்களின் அரசியலிலும், உலக அரசியல் போராட்டங்களிலும் தீவிர நாட்டம் கொண்டவராக விளங்கினார்.

1976 ஆம் ஆண்டளவில் ஈரோஸ் அமைப்பை லண்டனில் நிறுவிய இவர், பாலஸ்தீன விடுதலை இயக்கம் - ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்ற விடுதலை அமைப்புகளுடனான உறவுகளை பேணி வந்தார்.


No comments:

Post a Comment