தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சுப்பிரமணிய பாரதி ,விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தினம் இன்று!


சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம் இன்று .
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2], ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்[3]. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆன்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாக கருதினார்.

விசுவநாதன் ஆனந்த்
விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்
இந்திய சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் இந்திய சதுரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் பையன் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக