தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 25, 2015

உங்களுக்கு பிடித்த நிறத்தைக் கொண்டே நீங்கள் எப்படியானவர் என்று தெரிந்து கொள்ளலாம்!

நிறம் என்பது நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. நம் உணர்வுகள், நம் செயல்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள பல்வேறு விடயங்களுக்கு நாம் எப்படி பதில் அளிக்கிறோம் போன்றவைகளில் நிறத்தின் பங்களிப்பு இருக்கலாம் என்கின்றனர்.

நிறங்களையும் பற்றியும், அதன் செல்வாக்கை பற்றியும் பல ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களுக்கு மிக பிடித்த நிறம் உங்களை பற்றி பல விஷயங்களைக் கூறும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
உங்களுக்கு பிடித்தமான நிறத்தைப் வைத்து நீங்கள் எப்படியானவர் என்பதை பற்றி தேர்ந்து கொள்ளலாம்
வெள்ளை :
தூய்மை, தீங்கின்மை மற்றும் எளிமையை குறிக்கும் வெள்ளை நிறம், இளமை மற்றும் தூய்மையின் மீது திடமான சித்தாந்தங்களை கொண்டுள்ளது. நீங்கள் பூர்ணத்துவம் மற்றும் இயலாத கொள்கைகளின் மீது ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். மேலும் எளிய வாழ்க்கையின் மீதான நாட்டத்தையும் இது குறிக்கும்.
சிகப்பு
வலிமை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தை குறிக்கும் சிகப்பு நிறம் வெளிப்படை, ஆக்கிரமிப்பு, தீவிரம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களுக்கு பிடித்த நிறமாக இருக்கும். இந்த நிறத்தை விருப்பத் தேர்வாக கொண்டவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், சலிப்பூட்டுவதை தாங்கி கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
பிங்க்
பிங்க் நிறம் பிடித்தவர்கள் அன்பை எதிர்ப்பார்ப்பார்கள். அதே போல் காதலிக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பார்கள். தங்களை மென்மையானவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள். மேலும் வசீகரம் மிக்கவராகவும், கனிவான உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
ஆரஞ்சு
அலங்காரமான மற்றும் குதூகலத்தை விரும்பும் நபராக இருந்து, சமுதாயத்தோடு நெருங்கி பழகுபவர்களுக்கு, ஆடம்பரம் மற்றும் இன்பத்தை குறிக்கும் இந்த நிறம் பிடிக்கும். இவர்கள் சற்று நாடகத்தனமாக இருப்பார்கள். அதனால் இவர்கள் கவனிக்கப்படுவார்கள். ஆனாலும் கூட அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.
மஞ்சள்
சந்தோஷம், அறிவு மற்றும் கற்பனைக்கான நிறமான மஞ்சள் நிறத்தை மன ரீதியாக துணிவை கொண்டவர்கள், புதுமை மற்றும் சுய பூர்த்தியை தேடி அலைவார்கள் விரும்புவார்கள். நல்ல வணிக தலைமை மற்றும் நகைச்சுவை உணர்வை கொண்டவர்களுக்கும் இந்த நிறம் ஒத்துப்போகும். அறிவு சார்ந்த நிறமானது இந்த நிறம்.
பச்சை
நல்லிணக்கம் மற்றும் சமநிலையின் நிறமான பச்சை நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் அமைதியை குறிக்கும். மென்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்களுக்கு இந்த நிறம் பிடிக்கும். சுய புறக்கணிப்பு, எளிமை மற்றும் பொறுமைசாலியாகவும் இவர்கள் இருப்பார்கள். அதனால் மற்றவர்களால் மிக எளிதாக சுரண்டப்படுவார்கள். மேலும் இவர்கள் சுத்தரிக்கப்பட்ட எண்ணங்களுடன், நாகரீகமானவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள்.
நீலம்
மென்மையான, இதமளிக்கக்கூடிய, இரக்கம் மற்றும் அக்கறை குணங்களை கொண்டுள்ள நீல நிறமானது ஆழ்ந்த சிந்தனை, சுய பரிசோதனை, பழமைவாதம் மற்றும் கடமைக்கான நிறமாகும். பொறுமை, விடா முயற்சி, நேர்மையான, உணர்ச்சிமிக்க மற்றும் சுய கட்டுப்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள் இந்நிறத்தை விருப்பத் தேர்வாக கொண்டவர்கள். தங்களின் நிலையான குணம் மற்றும் அறிவிற்காக தாங்கள் பாராட்டப்பட வேண்டும் என நினைப்பார்கள். உண்மையுள்ளவர்களாக இருந்தாலும் கூட நெகிழ்வற்ற நம்பிக்கைகளுக்காக கவலை கொள்பவர்களாக இருப்பார்கள்.
லாவெண்டர்
உயர்ந்த நிலையில் வாழும் மனிதர்களுக்கு இந்த நிறம் பிடிக்கலாம். இத்தகையானவர்கள் இழிந்த எதையும் காண மாட்டார்கள்; எப்போதும் நேர்த்தியாகவும் அழகாக ஆடை அணிந்தும் காணப்படுவார்கள். பண்பாடு, வாழ்க்கையின் சுத்தரிக்கப்பட்ட விஷயங்கள், உன்னத காரணங்கள் போன்றவைகள் மீது தொடர்ச்சியான தேடலை கொண்டிருப்பார்கள்.
ஊதா
இந்த நிறத்தை விரும்புபவர்கள் தனித்துவம் வாய்ந்த, நகைச்சுவை உணர்வு மிக்க மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். மேலும் தனித்துவத்துடன் வேறுபட்டு இருக்க தீவிர நாட்டத்துடன் இருப்பார்கள். எளிதில் கோபம் அடைகிற, பிரம்மாண்டமான மற்றும் கலையாற்றல் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20151220118078#sthash.YcNKjv8d.dpuf

No comments:

Post a Comment