தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 9, 2015

தேனுடன் எள் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஆரோக்கிய சத்துக்களை தன்னுள் உள்ளடக்கிய தேனுடன் எள்ளை கலந்து சாப்பிடும்போது உடல் ஆரோக்கியம் நன்கு மேம்படும்.ஏனெனில் எள் தோல் முடி உடலுக்கு நல்ல உறுதியை அளித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
தாமிரச்சத்து, மக்னீசியம், சுண்ணாம்புசத்து, இரும்பு, ஜிங்க், வைட்டமின் பி1, மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்திற்கு உறுதி அளிக்கிறது.
இந்த எள் மற்றும் தேனும் சேரும்போது உடல் இரட்டிப்பு ஆரோக்கியம் அடைகிறது.
மருத்துவ பயன்கள்
தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.
இக்கலவையை தினமும் உட்கொண்டு வரும் போது, அதில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, வாய் ஆரோக்கியமும் மேம்படும்.
பெண்கள் தேன் மற்றும் எள்ளை கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அடிவயிற்று வலியைத் தடுக்கலாம். மேலும் எள்ளில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்.
உங்கள் வயிற்றில் புண் இருந்தால், தினமும் எள்ளையும் தேனையும் ஒன்றாக கலந்து உட்கொண்டு வாருங்கள். இதனால் தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயிற்றுச் சுவரைப் பாதுகாக்கும் மற்றும் எள் வயிற்றில் உள்ள புண் குணமாக உதவும்.
எள் மற்றும் தேனில் கால்சியம் அதிகம் உள்ளதால், இவற்றை உட்கொண்டு வர, எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதிலும் தினமும் உட்கொண்டு வந்தால், வயதான காலத்தில் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
தேன் மற்றும் எள் கலவை மூளைக்கு ஆற்றலை வழங்கி, சிறப்பாக செயல்பட உதவும். அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பது மிகவும் நல்லது.
ஆற்றலை ஏராளமாக அள்ளி வழங்கும். அத்தகைய பொருட்களை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், ஒரு நாளுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, சுறுசுறுப்புடன் நாள் முழுவதும் செயல்படலாம்.

No comments:

Post a Comment