தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 டிசம்பர், 2015

சோயா பால் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

வாழ்நாள் முழுவதும் சீரான ஆரோக்கிய வாழ்வு பெறவேண்டுமெனில் நோய்த்தடுக்கும் உணவுகளை தெரிவு செய்து உட்கொள்ள வேண்டும்.அந்த வகையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளில் சோயாவும் இடம்பெறுகிறது.
அடங்கியுள்ள சத்துக்கள்
சோயா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்ச்சத்து, பி வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துகள் நிறைந்துள்ளன.
அதே போன்று, சோயா பால் தோற்றத்திலும் குணாதிசயத்திலும் பண்ணை பால் போலவே உள்ளது. பல்வேறு வயதில் உள்ளோருக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களைக் கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர உணவாகும்.
பால் பானங்களைத் தவிர்க்க விரும்புவோருக்கு மாற்று பானம் சோயா புரோட்டீன் பானம்தான்.
மருத்துவ பயன்கள்
சோயாவிலுள்ள PUFA எனப்படும் Poly Unsaturated Fatty Acids இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.
சோயாவில் கரையும் நார்ச்சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
சோயா உணவு கெட்ட கொலஸ்ட்ரால் என்னும் LDL (Low Density Lipo proteins) அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL (High Density Lipoproteins) அளவைக் கூட்டுவதன் மூலம், மாரடைப்பைக் குறைக்கிறது.
தினசரி சோயா உட்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்று நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
முக்கியமாக நாள்பட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சோயா பெரும் பங்காற்றுகிறது.
சோயா உணவு மாதவிடாய் நின்ற பின் உடலில் ஏற்படும் சங்கடங் களைக் குறைத்து, எலும்புகளின் சீரழிவைத் தடுக்கிறது. சோயா உடல் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது.
இரும்புச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளதால், இவ்வுணவு கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது.
சோயாவில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் எனப்படும் விட்டமின் ஏ சத்து சருமத்தை மென்மையாக்குவதுடன், கண் சம்பந்தமான முக்கியமான மாலைக் கண் நோயைத் தடுக்கிறது.
குழந்தைகளுக்குத் தினமும் சோயா உணவில் சேர்க்கப்படும் போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.
குழந்தைகளுக்கு மாற்று உணவாக சோயா தொடர்ந்து தரப்பட்டு வந்தால் உடல் எடை, உயரம் மற்றும் நினைவாற்றல் கூடுவதுடன் இரத்த நிறமிகளின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையும் உயரும்.
சோயா உணவு கால்ஷியம், மக்னீஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களைக் கொண்டிருப்பதால், பற்களை உறுதிப்படுத்துவதுடன் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.
சோயா உணவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தி மூட்டுவலியைக் (ஆர்த்ரைட்டிஸ்) குறைத்து சிறுநீரகக் கோளாறிலிருந்து பாதுகாக்கிறது.
ஒரு கிலோ சோயா வடகத்திலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால் அல்லது 1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளின் புரதத்திற்கு சமமானது.
அனைத்துப் பருப்புகளிலும் உள்ள புரதச் சத்தைவிட மும்மடங்கு புரதச்சத்து சோயா வடகத்திலுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கும் இது மிக அவசியமான ஊட்டச்சத்து உணவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக