தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 4, 2015

உங்களின் குருதி வகை என்ன? அதுக்கேற்ப சாப்பிடுகின்றீர்களா.....?


பலர் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல வழிகளில் முயற்சி செய்து அதற்காக அதாவது சத்துள்ள உணவுகளை உண்டு தினமும் உடற்பயிற்சி செய்தல், யோகாசனம் செய்து  மேலும் அசைவ உணவுகளை தவிர்த்து மரக்கறி வகைகளையும் பழங்களையும் அதிகளவில் உண்ணுகிறார்கள்.
ஆனால் இவற்றை செய்தும்கூட உணவு செரிமான பிரச்சினை, சோர்வு உணர்வு போன்றவை சிலருக்கு இருக்கத்தான் செய்கின்றது. அதற்கு காரணம் உங்களது குருதி வகைக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகளை உண்ணாமலும் தவிர்க்க வேண்டிய உணவுகளை உண்பதுமே ஆகும். எனவே உங்கள் குருதி வகைக்கேற்ப நீங்கள் உண்ணவேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை...?

Type “O”
“O” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக கவனம் கூடியவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வியக்கத்தக்க தலைமைப்பண்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் பெரும்பாலும் அசைவ உணவுகளில் அதிக நாட்டமுள்ளவர்களாகவும் இருப்பர்.
நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் புரதச்சத்தினை அதிகம் கொண்ட மரக்கறிகள், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகளவில் உண்ணலாம். எனினும் தினசரி உணவுகளில் அவரை, தானியங்கள், பால் போன்றவற்றை சிறிய அளவிலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உடல் நிறையினை குறைத்துக்கொள்ள விரும்பினால் கடலுணவுகள், கீரைவகைகள், பச்சைப் பூக்கோசு போன்றவற்றை உண்ணுவதோடு கோதுமை, சோளம், பயறு, முட்டைக்கோஸ் போன்றவற்றை உண்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் உப்புள்ள உணவுகளை உண்பதால் அயோடினின் அளவை சீராக பேணி உடலிற்கு உகந்த தைரோயிட் அளவினை உங்களால் பேண முடியும்.

Type “A”


“A” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக பொறுப்புணர்ச்சி கூடியவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் அதே வேளை எதையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் மனமுடையவர்களாகவும் வெற்றிக்கு ஏங்குபவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் விலங்குகளில் இருந்து பெறப்படும் உணவு வகைகளின் மீது வெறுப்புடையவர்களாக இருப்பதோடு பருப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள் என்று சைவ உணவில் அதிக விருப்புடையவர்களாகவும் இருப்பர்.
நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் கோதுமை, தானியங்கள் போன்றவற்றை அதிகளவில் உண்ணலாம். எனினும் மீன், இறைச்சி போன்றவற்றை அளவுடனேயே உண்ண வேண்டும். நீங்கள் உங்கள் உடல் நிறையினை குறைத்துக்கொள்ள விரும்பினால் சோயா அவரை, மரக்கறிகள், அன்னாசிப்பழம் போன்றவற்றை உண்ணுவதோடு கோதுமை, இறைச்சி, பால் உணவுகள் போன்றவற்றை உண்பதை தவிர்ப்பது நல்லது.

Type “B”


“B” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக இயற்கையினை நேசிப்பவர்களாகவும் தமக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்பவர்களாகவும் தங்களது மனது போடும் சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.
நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் தாராளமாக இறைச்சி, பாலுணவுகள் (யோக்கர்ட், சீஸ்), இலைக்கீரைகள், மரக்கறிகள், பழங்கள் (வாழைப்பழம், திராட்சைப்பழம்) போன்றவற்றை உண்ணலாம். எனினும் தானியங்கள், சோளம், கோதுமை, கச்சான் போன்றவற்றை உண்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

Type “AB”


“AB” வகை குருதியினை கொண்டவர்கள் பொதுவாக நம்பகத்தன்மை உடையவர்களாகவும் அதிகளவில் ஏனையோருக்கு உதவுபவர்களாகவும் இருப்பார்கள்.
நீங்கள் இக்குருதி வகையினராக இருப்பின் மரக்கறிகள், பாலுணவுகள், பழங்கள் (செர்ரிபழம், அத்திப்பழம், தர்ப்பூசணி) போன்றவற்றை தாராளமாக உண்ணலாம். மேலும் இலகுவில் சமிபாடடையக்கூடிய கடலுணவுகளான சலமன், சூரை போன்றவற்றையும் உண்ணலாம். எனினும் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற ஜீரணம் ஆக கஷ்டப்படும் உணவுகளை உண்பதை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment