தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, December 21, 2015

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு ..................கவியரசு கண்ணதாசனின் அற்புதமான பாடல் !


கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ.........!!

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் .....!!

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு.......?

..................கவியரசு கண்ணதாசனின் அற்புதமான பாடல் !

No comments:

Post a Comment