தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஜூலை, 2015

ஆபத்தை ஏற்படுத்தும் நகச்சுத்தி: சரி செய்வது எப்படி?


நகங்களில் மறைந்திருக்கும் அழுக்குகளால் ஏற்படும் ஆபத்து
நகச்சுத்து எனப்படும் நகச்சொத்தை ஏற்படக்காரணம் நகக்கண்களில் அழுக்கு சேர்வதே ஆகும்.
நகத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் கொண்ட திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. அதை நகத்தளம் என்பார்கள்.
இந்த நகத்தளத்தை கடந்து வளரும் நகப்பகுதி செத்துப்போய்விடும். வளர்ந்த நுனி நகத்தை நாம் வெட்டும் போது நமக்கு வலி தெரியாமல் இருப்பது இந்த காரணத்தால் தான்.
நகத்தின் கீழே மறைந்திருக்கும் பகுதி நகவேர் ஆகும். நகத்தை முளைக்க வைக்கும் சக்தி கொண்ட பாகம் இது.
நகப்பகுதியில் ஏதாவது எதிர்பாராத விதமாக விழுந்து விட்டாலோ, அடிபட்டாலோ விண்ணென்று வலிக்கும்.
சிறிது நேரத்திற்கு பிறகு வலி, சற்று குறைந்தது போல் தோன்றும். ஆனால் நகத்தளத்தில் ரத்தம் கட்டிக்கொண்டது என்றால், அது கடுமையான வலியை ஏற்படுத்தும். சிலர் இதற்கு எண்ணெய் தேய்த்து ‘மசாஜ்’ செய்வார்கள்.
இது பயன்தராத ஒரு சிகிச்சை. ஐஸ் ஒத்தடம் கொடுப்பதே நல்லது. அப்போதும் வலி குறையாமல் அடிபட்ட நகப்பகுதி கருநீல நிறத்தில் காட்சி தந்தால் டாக்டரிடம் தான் செல்ல வேண்டும்.
அந்த விரலை தற்காலிகமாக மரத்துப்போக வைத்து, நகத்தின் அடியில் கட்டிக்கொண்டிருக்கும் ரத்தத்தை நீக்கினால் தான், அது குணமாகும்.
மேலும், நகங்களில் அதிக அழுக்குகள் சேருவதால் ஏற்படும் நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை நீர் விட்டு அரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வந்தால் நகச்சொத்தை மாறும்.
வேப்பிலையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து அரைத்துப் பூசி வந்தாலும் நகச்சுத்து குணமாகும்.
நாட்பட்ட நகச்சுற்று (Chronic paronychia) இது சிறிது சிறிதாகத் தோன்றி, நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வகையாகும்.
திடீரென ஏற்படும் நகச்சுத்தியை அலட்சியம் செய்துவிட்டால் இடையிடையே சீழ் பிடித்து ஆறிவிடும்.
அவ்வாறு நீண்ட காலம் நீடிப்பதால் நகமானது கீழுள்ள நகப்படுக்கையில் பிளந்து விடுவதும் உண்டு. அத்துடன் நகத்தின் மேற்பகுதியில் தடிப்புகள் தோன்றி அது தன் இயல்பான வழுவழுப்பான அழகிய தோற்றத்தை இழந்துவிடும்.
நகத்தின் நிறமும் மஞ்சள் அல்லது சாம்பல் பூத்ததாக மாறிவிடும். அவ்வாறு ஏற்பட்டால் நகம் மீண்டும் வளர்ந்து தனது இயல்பான தோற்றத்தைப் பெற ஒரு வருடக்கணக்காகலாம்.
கவனிக்காமல் விட்டு விட்டால் இந்நகச்சுத்து சரியாகாமலே விரல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
இதற்கு, சின்ன வெங்காயம் நான்கைந்து, மஞ்சள் பொடி சிறிதளவு, கஸ்தூரி மஞ்சள் பொடி சிறிதளவு, வசம்புப் பொடி சிறிதளவு, சுக்குப்பொடி சிறிதளவு, முருங்கை இலை சிறிதளாவு எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து அரைத்து சிறிதளவு எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து நகச்சுத்தைச் சுத்திப் போட்டு வந்தால் ஒரு வாரம் அல்லது இரு வாரங்களில் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக