இது ராஜஸ்தான் தலைநகரமான ஜெய்ப்பூரிலிருந்து 500 கி.மீ.க்கு மேலான தூரத்திலும் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும் உள்ளது.
தங்க நகரம் என்ற புனைப் பெயரும் இதுக்கு உண்டு. இந்த நகரில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் மஞ்சள் நிறத்திலோ, மணற் கற்கள் நிறத்திலோ பெயின்ட் பூசப்பட்டு மின்னுவதால் அந்த பெயரை ஏற்படுத்திக் கொண்டது.
ஜெய்சால்மர் அழகிய மணல் செறிந்த தார் பாலைவனத்துக்கு மத்தியில் அமைந்துள்ளதால், இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. நாளடைவில் இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஜெய்சால்மர் தன்னை மாற்றிக்கொண்டது.
காலநிலை:
இங்கு சுற்றுலா செல்ல உகந்த காலம் அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரை. இங்கு கோடைகாலத்தில் வெப்பநிலை 40 -25C குளிர்காலத்தில் 24 -7C ம் இருக்கும். இங்கு இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். ராஜஸ்தானி, ஹிந்தி, உருது ஆகியவை இங்கு பேசப்படும் மொழிகள்.
கொண்டாடும் பண்டிகைகள்:
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய தினங்களை கொண்டாடுகின்றனர். தீபாவளி, ஹோலி, ஈத் பண்டிகைகள் மதம் மற்றும் கலாச்சார ரீதியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளாகும்
உணவில் தனித்துவம்:
ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணிகள் விரும்பி உண்ணும் சைவ அசைவ உணவுகளும் அங்குள்ள கலாச்சார பாரம்பரிய உணவுகளும் பாலை மணல் நகரமான ஜெய்சால்மரில் ஏராளமாக கிடைக்கிறது. இவர்கள் உணவு வடநாட்டவர்கள் உணவிலிருந்து மாறுபட்டது. மேற்கத்திய மாநிலங்களின் உணவு வகைகள் இந்தியாவிலேயே சிறந்தவை.
கோழியையும் காய்கறிகளையும் சேர்த்து வறுத்த ஒரு உணவு எல்லோராலும் விரும்பப்படுகிறது. கெர் சங்கரி (பாலைவன பீன்ஸ், கெபெர்ஸ் மற்றும் தெளிக்கப்பட்ட இறைச்சி) இது ஜெய்சால்மரின் அலாதியான உணவு.
தூங்கா நகரம்:
ஜெய்சால்மரில் இரவிலும் (நைட் லைப்) அங்குள்ள ஹோட்டல்களில் கலாச்சார நடனங்களும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் டிஸ்கோத்தே நடனங்களும் வெளிநாட்டு மதுபானங்களும் விடியவிடிய களைகட்டும். பாலைமணல் வெளிகளில் இரவில் மின்னும் மின்விளக்குகளின் அலங்காரமும் அழகும் கண்ணைக் கவரும்.
சுற்றுலா செல்பவர்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்:
ஜெய்சால்மர் கோட்டை, பாலைவன கலாச்சார மையம், கேட்சிசர் ஏரி, படா பாஃப், ஜெயின் கோவில், தஸியா டவர். ஹவெலிகள் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.
இங்கு ஒட்டக சவாரியும் ஜீப் சவாரியும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் அம்சங்களில் ஒன்று.
பாலைவன கலாச்சார மையம்:
பாலைவன கலாச்சார மையமும் மியூஸியமும் ஒரே இடத்தில் உள்ளது. இங்கு ராஜஸ்தான் மக்களின் வளமான பாரம்பரிய உடைகள், ராஜஸ்தானின் புகழை உலகில் பரப்பும் தகுதியுடையது. பயணிகள் போதுமான நேரம் ஒதுக்காமல் இங்குள்ள சிறப்புகளை மனம் கொள்ள முடியாது.
அரிதான நாணயங்கள், முக்கிய குறிப்பேடுகள் பழங்கால பொருள்கள் இங்கு பராமரிக்கப்படுகிறது. அது ஜாய்சால்மர் வரலாற்றையும் ராஜஸ்தானின் வரலாற்றையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.
மியூஸியத்தில் பழங்கால பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், இசைக்கருவிகள், பாத்திரங்கள், படிமங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ’கரல்’ என்ற ஓபியம் கலவைப் பெட்டி வெளிநாட்டினரிடையே வாங்கும் மோகத்தை ஏர்படுத்தியுள்ளது.
ஜெய்சால்மர் கோட்டை:
ஜெய்சால்மர் கோட்டை ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி காலத்தில் ஜெய்சாலா என்ற மன்னரால் கி.பி. 1156 ம் ஆண்டில் கட்டப்பட்டது. அவர் மேலும் கோட்டையின் சுற்றுச்சுவரில் 99 கோட்டை வீடுகளையும் கட்டினார்.
கோட்டையை சுற்றிலும் வீடுகளும் கடைகளும் குறுகிய நடைபாதை தெருக்கள் கடைவீதியாகவும் அமைந்துள்ளது.
படா பாஃப்:
ஜெய்சால்மரில் பார்க்க வேண்டிய இடங்களில் படா பாஃப்ம் ஒன்று. படா பாஃப் என்றால் பெரிய தோட்டம் என்று பொருள். இந்த தோட்டம் 16 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னர் மஹர்வால் ஜெய்த்சிங் என்பவரால் துவங்கப்பட்டு, அவர் இறந்த பிறகு அவருடைய மகன் லுனகரனால் அமைக்கப்பட்டது.
இந்த தோட்டத்தோடு ஒரு பெரிய அணையும் ஒரு டேங்கும் என மொத்தம் மூன்று இடங்கள் அருகருகிலேயே பார்க்க வேண்டியவை. அணையை அங்குள்ள மக்கள் ஜெய்த் பாந்த் என்றும் டேங்கை ஜெய்த் சர் என்றும் அதை கட்டியவர்களுடைய பெயரை வைத்தே அழைக்கின்றனர்.
கேட்சிசர் ஏரி:
சுற்றுலாப் பயணிகளை கவரும் இந்த ஏரி, ஜெய்சால்மர் நகருக்கு தண்ணீர் அளிக்கும் மூலமாகவும் விளங்குகிறது. அதுக்காகவே இந்த ஏரி மன்னர்கள் காலத்தில் 1400 ம் ஆண்டில் மகாராஜா மஹர்வால் கேட்சி சிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. பயணிகள் தற்போது படகு சவாரிக்கும் இதை பயன்படுத்துகின்றனர்.
இங்கு உள்ள உள்ளூர்வாசிகள் இந்த ஏரியில் உள்ள கெழுத்தி மீனை ரொட்டியில் வைத்து பொறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கின்றனர். சுற்றுலாவுக்கு ஏற்ற நகரமான ஜெய்சால்மரை பற்றி கட்டுரையில் சொல்லப்படாத சிறப்புகளும் உண்டு.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக