சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிடுவதற்கு பயனடுத்தும் மொழி மிக முக்கியமானது என்பதை உணரவேண்டும்...
கருத்தை பதிவிடுபவர்கள் ஒன்று தங்கள் தாய் மொழியில் பதிவிடலாம் அல்லது அவர்களுக்கு தெரிந்த ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் பதிவிடலாம்... ஆனால் இங்கு பலர் தமிழிலும் இல்லாமல் ஆங்கிலத்திலும் இல்லாமல் தமிழ் உச்சரிப்பில் ஆங்கில எழுத்துகளில் பதிவிடுகின்றனர்...
உதாரணமாக :- " நான் தமிழ் மாணவன் " என்பதை " Nan Tamil Manavan " என்று கொச்சையாக எழுதுகிறார்கள்.
ஏட்டில் இருந்த தமிழை இணையத்தில் ஏற்றி தமிழை வளர்ச்சிப் பாதையில் கொண் டு செல்ல பலர் முயற்சி செய்துக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு சிலர் மீண்டும் பின்நோக்கி செல்கிறார்கள்....
இணையத்தில் தமிழில் பதிவிடுவது ஒன்றும் கடினமான செயல் அல்ல... அதற்கான மென்பொருள் மற்றும் வழி முறைகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்... அதை அனைவரிடம் பகிர்ந்து பயன்பெறுங்கள்...
#கணினி பயன்படுத்துபவர்களுக்கு :-
1. For google chrome users :-
https://chrome.google.com/
2. http://
3. http://www.google.com/
4. http://thamizha.org/
#Android Phone users
1. https://play.google.com/
2. https://play.google.com/
மேலும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள் பற்றியும் கூறுங்கள்...
இத்தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அனைவரையும் தனி தமிழில் பதிவிட சொல்லுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக