1.பர்சனல் வொர்க் எதுவும் ஆபீஸ் கம்ப்யூட்டர் ல பார்க்க கூடாது. facebook கூட திறக்க கூடாது ன்னு சொல்றாங்க. ஆனா ஆபிஸ் கம்ப்யூட்டர் ர வீட்டுக்கு கொண்டு வந்து விடிய விடிய ஆபீஸ் வொர்க் பாக்கலாம் ன்னு சொல்றாங்க.
2.கிளாஸ் ல பாடம் நடத்தறப்ப தூங்க கூடாது சொல்றாங்க. ஆனா வீட்ல தூங்கற நேரத்துல டீ குடிச்சி, முகத்த கழுவி, நின்னுட்டு, நடந்துட்டேவாது படிக்கணும் ன்னு சொல்றாங்க.
3.பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்கலைன்னு சொல்றாங்க. ஆனா, எக்ஸாம் ஹால் ல பக்கம் பக்கமா எழுதறாங்க. முதல் மதிப்பெண் வேற வாங்கறாங்க
4.நல்லா மேக்கப் போட்டு வறாங்க. இன்னைக்கு டைம் ஆயிட்டுன்னு சரியா பவுடர் கூட அடிக்கலைன்னு சொல்றாங்க.
5.தெரியாதுன்னு பதில் சொன்னா திட்டறாங்க. ஆனா பதில் தெரியாதுன்னு தெரிஞ்சே தான் கேள்வி கேக்கறாங்க.
6.பொய் பேசறது தப்பு ன்னு சொல்றாங்க. ஆனா உண்மைய பேசினா உதைக்கறாங்க.
7.பொண்ணுங்க ஏமாத்தறாங்க ன்னு மூச்சி வாங்க பேசறாங்க. ஆனா கடன் வாங்கியாவது டாப் அப் செய்றத மட்டும் நிறுத்தவே மாட்டறாங்க.
8.சூரியன் கூட விடிய காலைல எழும்புது. நீ ஏன் 10 மணி வரை தூங்கறன்னு கேட்கறாங்க. ஆனா சூரியன் சாயங்காலம் 6 மணிக்கே தூங்க போயிருது, அதனால தான் காலைல 6 மணிக்கே எழும்புது. நான் 10 மணிக்கு தான தூங்க போனேன். இதை சொன்னா அடிக்க வறாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக