கடல்வாழ் உயிரினங்களில் திமிங்கலத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய உயிரினமாக சுறா மீன்கள் அறியப்படுகிறது.
சுறா மீன்கள் மனிதனை விரும்பி உண்பவை. கடலுக்குள் மனித இனத்தை அச்சுறுத்துவதில் சுறா மீன்கள் முதன்மை வகிக்கின்றன.
மனிதர்கள் மற்றும் தங்களுக்கு உணவாகும் மீன்களின் இருப்பிடங்களை எளிதில் கண்டுபிடித்து விடும் திறமையை பெற்றுள்ளதே சுறா மீன்களுக்குரிய அற்புதமான குணாதிசயம் ஆகும்.
கடலில் குறிப்பிட்ட சில எல்லையை ஒரு மனிதன் தொடும்போது, சுறா மீன்கள் எங்கிருந்தாலும் அந்த மனிதனை நோக்கி சரியாக வந்துசேர்ந்து விடும்.
மனிதர்கள் இருக்கும் இடத்தை சுறா மீன்கள் மட்டும் எப்படி சரியாக அறிந்து கொள்கின்றன? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றலாம்.
உலகில் எந்த ஒரு மீன் இனத்திற்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த சுறா மீன்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இதயத்துடிப்பை உணரும் சிறப்பு.
தொலைதூரத்தில் நீந்தும் மனிதர்கள் மற்றும் மீன்களின் இதயத்துடிப்பை எளிதில் உணர்ந்து அவற்றின் இருப்பிடத்துக்கு சுறா மீன்கள் வந்து விடுகின்றன.
இதயத்துடிப்பை உணரும் தன்மை சுறா மீன்களை தவிர வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது என்று கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக