தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கலோ பிரம்மா ,,,,,,வணக்கம் நான் இந்தியாவில் இருந்து பேசுகின்றேன் .........சனத்தொகையின் அதீத வளர்ச்சி அச்சம் தருகிறதாம்!


பிரம்ம தேவருடன் அல்லது குடும்ப தலைவர்களுடன் அவசரமாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய கட்டத்தில் உலக தலைவர்கள் இன்று இருப்பதாக கருதுகின்றேன் .காரணம் உலக சனத்தொகையின் அதீத வளர்ச்சி முடிவுற்ற 2012 ஆண்டோடு உலக சனத்தொகை 700 கோடியை தாண்டி விட்டது ./தற்பொழுது 713 கோடி /இன்றைய கணக்கீட்டின் படி 2,03,800 /இரண்டு இலட்சத்து மூவாயிரத்து எண்ணூறு பேர் /இதில் சிறு மாற்றங்கள் நிகழலாம் /நாளும் அதிகரிப்பதாக தகவல்கள் சொல்கின்றது இதே வேகத்தில் போனால் இன்னும் சில 10 ஆண்டுகளில் 1000 கோடியை எட்டி விடும் .

எதிர்காலத்தில் அந்த 1000 கோடி மக்களும் இதே பூமியில் தான் வாழ வேண்டும் அப்படியானால் ,இடப்பிரச்சனையில் தொடங்கி உணவு பிரட்சனை ஏனைய பிரட்சனைகள் என மனித குலம் பாரிய பிரட்சனைகளை எதிர்காலத்தில் எதிர்நோக்க இருக்கின்றது .அதிலும் மொத்த சனத்தொகையில் ஏனைய கண்டங்களையும் விட 5 இல் 3 பங்கு மக்கள் தொகையை ஆசிய நாடுகளே தங்கள் மக்கள் ஆக கொண்டு உள்ளார்கள் .

உலக சனத்தொகையில் முதலிடத்தில் சீனாவும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும் மூன்றாம் இடத்தில் அமெரிக்காவும் இருக்கிறது .2012 கணிப்பீட்டின் படி முதல் 12 நாடுகளின் மக்கள் தொகையை கீழே தருகின்றேன் ,,,,,,
சீனா 136 கோடி மக்களையும் / 136 1763 000
இந்தியா 121 கோடி மக்களையும் / 121 4464 000
அமேரிக்கா 31 கோடி மக்களையும் / 31 7640 000
இந்தோனேசியா ,23 கோடி மக்களையும் / 23 2517 000
பிறேசில் ,19 கோடி மக்களையும் / 19 5423 000
பாகிஸ்தான் 18 கோடி மக்களையும் / 18 4753 000
பங்காள தேஷ் 16 கோடி மக்களையும் / 16 4425 000
நிஜேரியா 15 கோடி மக்களையும் / 15 8259 000
ரஷ்யா 14 கோடி மக்களையும் / 14 0367 000
ஜப்பான் 12 கோடி மக்களையும் / 12 6995 000
மெஸ்சிகோ 11 கோடி மக்களையும் / 11 0645 000
பிலிப்பைன்ஸ் 9 கோடி மக்களையும் / 9 3617 000
,,,,,,,,,,,,இவ்வாறு மக்கள் தொகையை கொண்டு இருக்கின்றார்கள் ,இதில் சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவை விட மூன்று மடங்கு நிலப் பரப்பை கொண்டு இருகின்றார்கள்
சீனா 95 96 961 சதுர கிலோமீற்றர் ,அமேரிக்கா 93 63 123 சதுர கிலோமீற்றர் ,இந்தியா ,32 87 590 சதுர கிலோமீற்றர் ,,,இந்தியாவோடு ஒப்பிடும் பொழுது சீனா ,உடன் இடபிரட்சனையை எதிர்நோக்காது அமெரிக்காவில் சனத்தொகை வளர்சிவீதம் மிகவும் குறைவாக இருப்பதால் அது எதிர்காலத்திலும் இட பிரட்சனையை எதிர்நோக்காது ,,,இங்கு இடபிரட்சனையால் அதிகம் பாதிக்கப்பட போகும் நாடுகள் சில ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் அதில் முதன்மையாக பாதிக்க படபோகும் நாடு இந்தியா ,,

உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது.1987 ஜூலை 11 இல் 500 கோடியை தொட்டது அன்றைய தினத்தையே உலக மக்கள் தொகை தினமாக கொண்டாடுகின்றார்கள் .தற்போது 713 கோடியாக உயர்ந்துள்ளது. 2050ல் இந்த எண்ணிக்கை 955 கோடியாகவும்,மாறும் என்று கணிப்பிடுகின்றார்கள் .. இந்திய மக்கள்தொகை, 1950ல் 38 கோடியாக இருந்தது. 2012 கணக்கின் படி, 121 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை, 2050ம் ஆண்டில் 162 கோடியாக அதிகரிக்கும் எனவும், அப்போது இந்தியா தான் உலக மக்கள் தொகையில் முதலிடத்தை பெறும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மாறாகத் தற்போது 136 கோடி மக்கள் தொகையைக் கொண்டு, முதலிடத்தில் உள்ள சீனாவின் மக்கள் தொகை, 2050ல், 138 கோடியாக நிலைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது.,,,,,,,,

2050 இல் அனைத்து துறையிலும் முன்னேறி இருக்கும் சீனாவை சனத்தொகையில் மட்டும் முந்திய நாடு என்ற மிகப்பெரும் சாதனையை இந்தியா படைக்கும் ,,,,,

அடுத்து உலகில் வாழும் 713 கோடி மக்களில் ,23.2 கோடி மக்கள் இடம்பெயர்ந்து ஏனைய நாடுகளில் வாழ்வதாக கணிப்பிடபட்டுள்ளது ,அதில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 13.6 கோடி மக்களும் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 9.6 கோடி மக்களும் வாழ்வதாக கணிப்பிடபட்டுள்ளது ,,,,,,இந்த இடம் பெயர்ந்தவர்களில் நானும் ஒருவர் என்று கூறி கொண்டு இந்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்வதா துக்க படுவதா என்று யோசித்து கொண்டு இருக்கின்றேன் ,,,,,,கலோ ,,பிரம்மா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வணக்கம் நான் சிவமேனகை பேசுகின்றேன் ,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக