தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 டிசம்பர், 2014

புற்றுநோய் தாக்கத்தை முன்கூட்டியே அறியும் குருதிப் பரிசோதனை!

புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளாவதை ஐந்து வருடங்களுக்கு முன்னரே அறியும் குருதிப் பரிசோதனையை கண்டுபிடித்துள்ளதாக ஹவாட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலூக்கேமியா, லிம்போமா போன்ற நோய் பிறழ்வுகளை உடையவர்களின் குருதில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 13 மடங்கு அதிகம் இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குருதிப் புற்றுநோய்க்கு இதுவரை எந்தவிதமான சிகிச்சை முறையும் இல்லாத நிலையில் இப்புதிய கண்டுபிடிப்பானது ஒரு புதிய மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு விரைவில் குருதிப் புற்றுநோயை தடுக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக