முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்டர் ஆனது பயனர்களின் நலன் கருதி புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது சமூக வலைத்தளங்களின் ஊடாக இன்று பல்வேறு அத்துமீறல்கள் நிகழ்கின்றன. இவ்வாறான டுவீட்களை செய்பவர்களை தடை செய்யும் முகமாக அல்லது அவர்கள் தொடர்பாக ரிப்போட் செய்யும் முகமாக Block or Report எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒன்லைன் மூலமான துஷ்பிரயோகங்கள், துன்புறுத்தல்களை குறைக்க முடியும் என எதிர்பார்க்கும் டுவிட்டர் சேவை எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியினை தரவுள்ளது.
தற்போது இச்சேவை சிறிய குழுவாக உள்ள பயனர்களுக்கு மட்டுமே தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக