அமெரிக்காவின் மிகப்பெரும் கோடீஸ்வரராகவும், தொழிலதிபராகவும் இருந்த ஹென்றி ஃபோர்டைப் பார்ப்பதற்கு ஓர் இளைஞர் சென்றுள்ளார்.
ஹென்றி ஃபோர்டிடம் அந்த இளைஞர், உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதே எப்படி? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞனிடம் சிரித்துக் கொண்டே பதிலளித்த ஃபோர்ட், முயற்சி செய்தால் நீ கூட சம்பாதித்து விடலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆச்சர்யமடைந்த அந்த இளைஞர், என்னிடம் தொழில் தொடங்க அவ்வளவு பணம் இல்லை. ஒன்றும் இல்லாமல் எப்படிச் சம்பாதிக்க முடியும் என்று கவலையாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஃபோர்ட், என்னிடம் இல்லாத மதிப்புமிக்க ஒரு விஷயம் உன்னிடம் இருக்கிறதே. அதன் மூலம் நீ எதையும் சாதிக்கலாம்! என்று கூறியுள்ளார்.
இந்த பதிலால் குழப்பமடைந்த இளைஞர், அப்படி எதுவும் என்னிடம் இல்லையே என்று தெரிவித்துள்ளார்.
இளைஞனின் கண்களை உற்றுபார்த்து கொண்டே பதிலளித்த ஃபோர்ட், உன்னிடம் இளமை என்ற ஒப்பற்ற விஷயம் இருக்கிறதே. இந்த இளமையை வைத்து, நான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை விட உன்னால் பல மடங்கு சம்பாதிக்க இயலும்.
மேலும், அந்த இளமையை எனக்குக் கொடுக்கிறாயா? என் சொத்து முழுவதையும் உனக்கே எழுதித் தருகிறேன், என்று கேட்டுள்ளார். இதனால் நம்பிக்கை பெற்ற அந்த இளைஞர் முழு நம்பிக்கையுடன் அந்த இடத்தைவிட்டு சென்றுள்ளார்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 3 டிசம்பர், 2014
உன் இளமையை கொடு! என் மொத்த சொத்தையும் தருகிறேன்: இளைஞனை அசத்திய ஃபோர்ட்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக