1.அடுத்து வரப்போறவங்களை நினைச்சு கழிவறைல தண்ணீர் ஊத்தாத சமூகம்தான் அடுத்த தலைமுறைக்காக இயற்கைய காப்பாத்த போகுதா?
2. மெதுவடைல இருக்கிற மொளகாவ தூக்கி எறியுற அதே சமூகம் தான் மொளகால பஜ்ஜி போட்டும் சாப்பிடுது
3.எல்லா பண்டிகையையும் சிறப்புநிகழ்ச்சினு டிவில நாள்புல்லா விளம்பரங்களை பாத்து கொண்டாடுற ஒரு மாதிரியான சமூகம் நம்மளோட சமூகம் தான்
4.சக மனிதன் சீக்குல இருந்தா கூட கவலைப்படாத இந்த சமூகம்தான் சிட்டுக்குருவியின் அழிவைப்பத்தி கவலைப்படுது
5.பணக்காரன் தப்பு செய்து மாட்டிக்கொண்டால் கடந்துவிடும் இதேசமுகம்தான் ஏழையாக இருந்தால் பேசியே அவனை தற்கொலையீன் விளிம்புவரை தள்ளிவிடும்
6.டவுசர் மட்டும் போட்டு நடிச்ச காரணத்துக்காக சமந்தாவை கொண்டாடுற இந்த சமூகம்தான் பட்டா பட்டியை போட்டு போற கிராமத்தான கிண்டல் செய்யுது
7.வத்தல் காய வைக்கும் போது காக்காவ தொரத்துற இதே சமூகம்தான், சாமிக்கு படைச்சா காக்காவ முதல்ல திங்க சொல்லி கத்துத்து.
8.ஆணும் பெண்ணும் நெருங்கி பழகினா அதை நட்புன்னு நினைக்கும் கேடுகெட்ட சமூகம் தான் இது.
9.வெளிநாட்டில் தமிழ் பேசுவதை கௌரவமாக நினைக்கும் அதே சமூகம்தான் தமிழ்நாட்டில் தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கிறது
10.பவர்ஸ்டாரின் டோப்பாவை பரிகாசம் செய்யும் இதே சமூகம் தான், ரஜினியின் அனிமேட்டட் சிக்ஸ் பேக்கை புல்லரித்து ரசிக்கிறது...
11.குளிரும் போது ஸ்வெட்டர் போட்டுக்க சொல்லி கொடுத்த இதே சமுகம் தான் வெயிலில் சட்டை பட்டனை திறந்து விட்டு போகும் போது பொறுக்கினும் சொல்லுது...
12.ஒரு ஏழையின் நேர்மையை அவன் இயலாமையாகப்பார்க்கும் அதே சமூகம் தான் ஒரு பணக்காரனின் போலியான பணிவை சிலாகிக்கும்
13.ஒருவனை வசைபாடும் போது சற்றும் சம்மந்தமே இல்லாமல் அவனது அம்மாவை ஒழுக்கத்தை சாடும் கேடுகெட்ட சமூகம் தானே இது..
14.தெருக்கூத்து நடிகர்களை கூத்தாடிகள் என்று கேலி பேசிய சமூகம் தான், சினிமா நடிகர்களை ஸ்டார்களாக்கி உச்சந்தலையில் வைத்து கொண்டாடுகிறது.
15.கத்தி படம் பார்க்கும் போது விவாசாயிகாக உச்சு கொட்டுற சமுகம் தான் படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கோக்க கோலா வாங்கி குடிக்குது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக