சீத்தாபழ காலம் ஆரம்பிச்சுடுச்சு. அதன் அருமை பெருமைகளை அறிவீர்களா...?
இது இந்தியாவை சேர்ந்த பழம் இல்லை...அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்ததாக மொகாலய அரசர் அக்பர் தனது ஆவணங்களில் குறித்து வைத்துள்ளார்.
சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சி யை கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு போதுமான கால்சியம் ஒரு பழம் உண்பதாலேயே கிடைக்கும்.
அல்சர் உள்ளவர்கள் அல்லது வயிற்றில் அதிகபடியான அமில தன்மை உடையவர்களுக்கு இப்பழம் சிறந்தது. இதன் விதை பூச்சி கொல்லி மருந்தாகவும், இதன் பொடியானது தலை முடியில் உள்ள பேன் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து.
இதில் 16.5 சதவிகிதம் சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உள்ளவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்கவும். எடைகுறைவாக உள்ளவர்கள் எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.
இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.
இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில் நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு உதவியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக