தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

தமிழகத்தின் தலையெழுத்து..... கூத்தாடிகளால்.. கிறுக்கப்படுகிறது...கூத்தாடிகளின் பின்னால் செல்லும்...மூளையில்லா தமிழர்கள்...


தமிழகத்தின் தலையெழுத்து..... கூத்தாடிகளால்.. கிறுக்கப்படுகிறது...கூத்தாடிகளின் பின்னால் செல்லும்...மூளையில்லா தமிழர்கள்...

தமிழகத்தின் தலையெழுத்து...சில கூத்தாடிகளால் கிறுக்கப்பட்டு (எழுதப்பட்டு) வருகிறது....
தங்களுடைய பொழுதை போக்குவதற்காக கூத்தாடிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்த காலம் மலையேறி....கூத்தாடிகளிடம் தஞ்சம் அடைந்துகொண்டு இருக்கும் காலம் இது..."கண்டதே" காட்சி ... "பன்ச்" டயலாக்கே கொள்கை...என்று மாறி வரும் செல்லுலாயிட் காலம்..

சினிமா என்னும்.. கனவு தொழிற்ச்சாலையில் இருந்து வெளி வருவதை வைத்து ...கோட்டை கட்ட முயர்ச்சிப்பவர்கள் கூத்தாடிகள்... அதற்க்கு உடைந்தையாக இருப்பவர்கள்..சிந்திக்கும் ஆற்றல் இல்லாத...நம் தமிழர்கள்....

(1) சினிமாவில் 50 அடிகளுக்கும் மேல் பாய்பவர்கள்.. பறப்பவர்கள் ....நிஜ வாழ்வில்.. அரை அடி கூட தன்னுடைய பூத உடலுடன்.. எம்பி குதிக்க முடியாது என்ற ஒரு எதார்த்தத்தை கூட உணராதவர்கள் தான் நம் "தமிழ் ரசிக-வியாதிகள்"

(2) திரையில் பல தடைகளையும்.. மீறி..உடைத்து...நாயக..நாயகிகளை சேர்த்து வைக்கும்...பரந்த மனமுடையவர்கள்... நிஜத்தில்... அப்படி இருப்பதில்லை ...இருக்கவும் முடியாது என்று அவர்களே நிருபித்துவருகின்றனர்.. இதை உணராதவர்கள் "தமிழ் ரசிக-வியாதிகள்"

(3) நடிப்பு என்பதும் ஒரு தொழில்.. சராசரி மற்ற தொழில்.. வேலைகளை போன்ற ஒன்றே நடிப்பு, சினிமா துறையும்...அவர்கள் செய்யும் தொழிலும் என்ற சிறு உண்மையை கூட விளங்காதவர்கள் "தமிழ் ரசிக-வியாதிகள்".

(4) கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ரஜினி காந்த், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், தொடங்கி இப்போது விஜய் வரை திரையிலும்....அரசியலிலும் இவர்கள் செலுத்தும் ஆதிக்கம் குறைந்த பாடில்லை....தமிழகத்தை ஆள...தமிழகத்தில்...தகுதியானவர்கள் இல்லை...என்று ஏற்று கொண்டவர்கள் இந்த "தமிழ் ரசிக-வியாதிகள்".

(5) தன் குடும்பத்தினரையோ...உறவினர்களையோ அரைகுறை...ஆபாச உடைகளில் காண்பதை வெறுக்கும் ஒருவன், தவிர்க்கும் ஒருவன்...திரையிலும்.. பத்திரிக்கையிலும்.. ஒரு நடிகையை அரைகுறையாக கண்டு ஆனந்தம் அடைவது...அவனின் இரட்டை நிலையைத்தான் காட்டுகிறது....
சதை வியாபாரம் செய்யும்... நடிக கூத்தாடிகளுக்கு... "கோவில்" கட்டிய பெருமை நம் ரசிக-வியாதிகளையே சேரும்...

(6) ஊடக விபச்சாரகர்களான பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள்......குழந்தையை...கிள்ளிவிட்டும்...பிறகு...தொட்டிலை ஆட்டிவிடும்.. ஈன செயல்களை செய்யும்...போக்கு கண்டிக்கத்தக்கது....
இவர்களே பெண்கள் உரிமை.. மாண்பு...மகத்துவம் என்று பக்கத்துக்கு பக்கம் பீற்றுவார்கள்.. ஆனால்.. தனது நடுப்பக்கத்தில் நடிகைகளின் ஆபாச படங்களை பதிவேற்றுவார்கள்... நடிக..நடிகைகளின் கிசுகிசுக்களை பதிந்து தனது வாசகர்களை மூளை மழுங்க செய்வார்கள்..

(7) தொலைகாட்சிகளில் நடிக, நடிகை..கூத்தாடிகளை ரோல் மாடலாக ஆக்கும் போக்கும் தவிர்க்கப்பட வேண்டும்...குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே... நடன நிகழ்ச்சிகளை வழங்கி .. நச்சுக்களை விதைப்பதை நிறுத்த வேண்டும்...ஆபாச மாக உடை அணிவது...உடல் பாகங்கள் தெரிவது போல்.. ஆடை அணிவது தவறான செயல் அல்ல என்றும் பணம்.. பிரபலமாக ஆகலாம் என்ற விஷ கருத்துக்களை தொலைக்காட்சி நடன, நிகழ்ச்சிகளின் மூலமாக பரப்பிவருகின்றனர்..

(8) இன்று விஜய் படம் வெளிவராததர்க்காக தூக்கில் தொங்கியதற்கு.. அவனின் பெற்றோரே.. முழு முதல் காரணம்..
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதை ஊக்கப்படுத்த கூடாது... விசேஷ தினங்களில் சினிமாவை காண திரையரங்கிற்கு அனுப்புவதை சிறுவயதிலேயே நிறுத்தவேண்டும்...

(9) தனது அடிப்படை வசதிகளுக்காக, தேவைகளுக்காக, உரிமைகளுக்காக போராட தெருவில் இறங்க தயங்கும் ஒருவன்... விஷ-ரூபத்திற்காக போராடுவது வெட்கக்கேடானது... கருப்பு சட்டையில் ஒளிந்து இருக்கும் எண்ணற்ற கூத்தாடி விஷ ஜந்துக்கள், தங்களின் சுய தேவைகளுக்காக...ரசிக-வியாதிகளை பயன்படுத்தி கொள்கிறார்கள்..

(10) சினிமா,சின்னத்திரை.. வெள்ளித்திரை.. கூத்தாடிகளை பற்றிய உண்மைகளையும், எதார்த்தத்தையும், நிஜ வாழ்க்கையில் வரும் முரண்களையு...ம் ஒவ்வொரு தமிழர்களும் உணரவேண்டும்....கூத்தாடிகளின் மாய வலைகளில் விழாமல்...
தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்...இதை ரசிக-வியாதிகளாக இல்லாமல்... ஒரு தமிழனாக இருந்து செயல் படுத்தவேண்டும்...

1 கருத்து:

  1. சூழ்நிலை அருமையான பதிவு சகோதரா....


    ////(6) ஊடக விபச்சாரகர்களான பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள்......குழந்தையை...கிள்ளிவிட்டும்...பிறகு...தொட்டிலை ஆட்டிவிடும்.. ஈன செயல்களை செய்யும்...போக்கு கண்டிக்கத்தக்கது....
    இவர்களே பெண்கள் உரிமை.. மாண்பு...மகத்துவம் என்று பக்கத்துக்கு பக்கம் பீற்றுவார்கள்.. ஆனால்.. தனது நடுப்பக்கத்தில் நடிகைகளின் ஆபாச படங்களை பதிவேற்றுவார்கள்... நடிக..நடிகைகளின் கிசுகிசுக்களை பதிந்து தனது வாசகர்களை மூளை மழுங்க செய்வார்கள்..////

    இந்த வரிகளுக்கும் "சினிமா படங்களை தரவிறக்கம் செய்ய",உயிர்வானி"என இந்த வலைப்பூவில் நீங்கள் கொடுத்திருக்கும் லின்கும் முரடன் படுகிறது. இரண்டில் ஒன்றை நீக்கி ஒரு கருத்திற்கு வந்து விடுங்கள் சகோதரரே. எதை நீக்க போகிரீர்கள்???????

    பதிலளிநீக்கு