தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது
இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!
கி.பி 11ஆம் நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்! மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பரம்பரையில் வந்தவர்.
முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவடிவத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள். முடிசூட்டுவிழாவில் மாத்திரமன்றி, இன்றும் வருடாந்தம் டிசம்பரில் (நம் மார்கழி மாதம்) நிகழும் அரச ஊஞ்சல் விழாவிலும் தேவாரம் - பாவைப்பாடல்கள் அவர்களால் பாடப்படுவதுண்டு.
# தமிழர்கள் அல்லாத மன்னர்கள் தாங்கள் முடிசூடும் பொழுது திருவென்பாவையும், ஊஞ்சல் திருவிழாவில் தேவாரத்தையும் பாடுகிறார்கள் என்று கேட்கையிலே உள்ளம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது இருந்தும் நம் நாட்டில் இந்த தேவாரத்தையும், திருவென்பாவையும் யாரும் எண்ணிக்கூட பார்ப்பதில்லை என்று நினைக்கையில் மனம் வேதனை கொள்கிறது. கடல்கடந்து நம் தமிழர்களின் புகழை பரப்பினோம் இருந்தும் தமிழர்கள் தமிழ் மொழியின் பெருமையை உணரவில்லை என்பது தான் உண்மை.
#நந்தமீனாள்
மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக