தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

மொழிகள்!!



¤ உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.

¤ சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.

¤ உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை,மாண்ட்ரின் , ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காளம், போர்த்துகீசிய மொழி, இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு , ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.

¤ உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகிற சீன மாண்ட்ரின் மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

¤ தமிழ் மொழியானது 12000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

¤ உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் , அரபு , சீனம், சமஸ்கிருதம் , கிரேக்கம் , இலத்தீன் .

¤ உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வாடீகன் ஆகும்.

¤ உலகில் அதிகமொழிகள் பேசப்படுகின்ற நாடு பப்புவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850க்கும் மேற்பட்டமொழிகள் பேசப்படுகின்றன.

¤ ஆப்பிரிக்காவில் 2000க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை.

¤ உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும்,பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.

- வி. ராஜமருதவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக