தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

அந்த அக்கப்போரான தருணங்கள்..


அந்த அக்கப்போரான தருணங்கள்..

1) நான் பஸ் வர 2 நிமிஷம் முன்னாடியே பஸ் ஸ்டாப் வந்தா பஸ் 5 நிமிஷம் முன்னாடியே போயிருக்கும்.

2) நான் பஸ் வர 10 நிமிஷம் முன்னாடியே பஸ் ஸ்டாப் வந்தா பஸ் அரை மணி நேரம் ஆனாலும் வராது.

3) நான் இரயில் ல போறப்ப என்னடா இன்னைக்கு இரயில் வேகமா போற மாறி இருக்கேன்னு நினைப்பேன். நினைச்சு முடிக்கறதுக்குள்ள இரயில் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்க்கு முதல் ஸ்டாப்ல வந்து நின்னுரும்.

4) நான் ரொம்ப முக்கியமா ஒரு call பேசிட்டு இருக்கப்ப மொபைல் லோ பாட்டரி ஆகிடும். நான் அந்த முக்கியமான விசயத்தை சொல்றதுக்குள்ள சுவிட்ச் ஆப் உம் ஆகிடும்.

5) நான் புதுசா ஒரு இடத்துக்கு போயி விலாசம் தேடறப்ப ரோட்டுல யாருமே இருக்கமாட்டாங்க வழி கேட்க. அது ரிமோட் ஏரியா வா இருக்கும்.மொபைல் ல net உம் வொர்க் ஆவாது.

6) வேலை முடிச்சு வீட்டுக்கு பசியோட வந்து சமைக்கலாம்னு பிரிட்ஜ் ah தொறந்துப் பாத்தா சமைக்கறதுக்கு தேவையான ஒரு வெங்காயமும் வீட்ல இருக்காது.

7) ரொம்ப பெரிய லிஸ்ட் ah போட்டு இன்னைக்கு எல்லாத்தையும் வாங்கிறனுமுன்னு கடைக்கு போனா, வீட்டுக்கு வந்த அப்புறம் தான் ஞாபகம் வரும் முக்கியமா ஒன்னு வாங்க மறந்துடோமேன்னு.

 இன்னைக்கு ஆபிஸ் ல presentation இருக்குன்னு ரொம்ப டிப் டாப் ah டிரஸ் பண்ணிட்டு வெளியே போய் பாத்த அப்புறம் தான் தெரியும் மழை பெஞ்சுட்டு இருக்குன்னு.

9) ஆபிஸ் ல மதியம் மூணு மணிக்கு என்னதான் கண்ண தேச்சு தேச்சு பாத்தாலும் தூக்கம் மட்டும் போவாது. சரி ஒரு காபி குடிச்சு தூக்கத்தை விரட்டலாம்னு பாத்தா, எங்க தேடுனாலும் சில்லறை மட்டும் கிடைக்காது.

10) கிளாஸ் ல வாத்தியார் அடிக்கடி கேள்வி கேட்க சொல்லுராறேன்னு ஒரு கேள்வி கேட்டா
" இப்பதான் இந்த கேள்விய அவன் கேட்டான், பதில் சொன்னேன். நீ அப்ப என்னப் பண்ணிட்டு இருந்தன்னு " அவர் என்னைய திருப்பி கேள்வி கேப்பாரு.

11) இவ்வளவு ஏன் , primary school ல இருக்கும் போதே , என்னைக்குலாம் நான் ஹோம் வொர்க் நோட்ட வீட்டுல வச்சிட்டு போறேனோ , அன்னைக்கு மட்டும் தான் எங்க மிஸ் " எல்லாரும் ஹோம் வொர்க் நோட்ட எடுங்கன்னு" சொல்வாங்க.

# ஸ்ஸஸப்பா...முடியல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக