தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்!


ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள் :

1) சேலை, தாவணி கட்டினா பட்டி காட்டு பொண்ணுன்னு, மார்டன் உடை போட்டா அணிஞ்ச கலாசாரத்தை கெடுக்குற பொண்ணு அப்படி சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது?

2) மஞ்சள் பூசுனா மரியாதா மாறி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோனு நெனப்புனு சொல்லுறீங்க நாங்க என்ன தான் போட்டுகுறது?

3) தங்க நகை போட்டா இவகிட்ட தான் நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது, நகை போடலேனா ஆம்பள பையன் மாதிரி திரியிறானு சொல்லுறது அப்ப நகை போடுறதா வேண்டாமா?

4) போன் நம்பர் கேட்டு தரலேனா ரொம்ப பண்ணுறாநு சொல்ல வேண்டியது, கேட்ட உடனே போன் நம்பர் தந்தா இவ சரி இல்லா டா கேட்ட அடுத்த நிமிஷம் போன் நம்பர் தர்றா எல்லா பசங்களுக்கும் இப்படி தான் போன் நம்பர் தருவளோ ? அப்படினு தப்பா பேசுறது.. நாங்க போன் நம்பர் தரதா வேணாமா?

5) பொண்ணுங்களால தான் கலாசாரமே அழிஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க ஆனா இன்னைக்கும் கல்யாணத்துல பொண்ணுக போடவதான் கட்டியிருக்கோம் ஆண்கள் தான் பேண்டும் டையும் கட்டி இருக்காங்க. கலாச்சாரத்த கெடுக்குரது யாரு?

6) இதை எல்லாம் விட பெரிய கொடுமை என்னனா, பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்குன்னு சொல்லிட்டு, பெண்கள் அணியிற உடைகளுக்கு கட்டுப் பாடு விதிச்சுட்டு, இரவு நேரத்துல தனியா பெண்கள் பிரயாணிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க...

பிறர் மனதை புண்படுத்த இதை பதிவு செய்யவில்லை மனதில் தோன்றியதை பதிவு செய்தேன்.

-- நந்தமீனாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக