தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 ஆகஸ்ட், 2013

பெற்றோரின் பாசமா பிள்ளைகளின் காமமா!!


ஒரு பெண்ணுக்கு தனக்கு பிடித்த துணியை ,துணையை தேர்ந்தெடுத்து கொள்ள எல்லா உரிமையும் உண்டு ..

இதை சொல்லும் அதேவேளையில் ...

உலகம் அறியா தன் குழந்தை பால் ஈர்ப்பில் தவறான முடிகளை எடுக்கும் போது அந்த குழந்தைக்கு நல்வழி காட்டும் உரிமை பெற்றோருக்கு உண்டு ..பெற்றோர் தன் பிள்ளை நாசமாக போகவேண்டும் என்று நினைப்பதில்லை ...

இதை சொல்லும் அதேவேளையில் ...

பெற்றோரின் கணிப்பும் தவறாக போகலாம் , வசதியானவனோடு வாழ்வதை விட மனதுக்கு பிடித்தவனோடு வாழ்வதே மேல் என்று ஒரு பெண் முடிவு செய்தால் அதை தடுக்க கூடாது .

இதை சொல்லும் அதேவேளையில் ...

வாழ்க்கையில் பொருள் ஈட்டும் கஷ்டத்தை அனுபவிக்கும்போதும்தான் உலகத்தின் கோர முகம் தெரியும் ..வலி தெரியும் ...அனுபவம் வரும் ...இப்போதைக்கு உணவு என்பதை வாய் வரை கொண்டு வர தந்தை இருப்பதால் , கேட்டதை வாங்கி கொடுக்கும் பெற்றோர் இருப்பதால் அதை பற்றி கவலை கொள்ளாத மனது காதல் , சினிமா போன்றவற்றிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கும் ..அதுதான் உலகம் என்று நினைக்கும் ....இந்த பலவீனமான நிலையில் இருந்து குழந்தைகளை நல்வழிக்கு கொண்டு செல்ல பெற்றோருக்கு எல்லா உரிமையும் உண்டு ...

இதை சொல்லும் அதே வேளையில் ..

வீட்டில் வயசு பொண்ணுங்களை வைத்துகொண்டு அப்பா சினிமாவில் உருகி உருகி காதலித்தால் அவர் குழந்தைகளுக்கும் காதல் மீது ஈர்ப்பு வரத்தான் செய்யும் ...அது வேற டிபார்டுமெண்டு , இதை வேற டிபார்டுமெண்டு என்று பிரித்தரியும் பக்குவும் வயசு பிள்ளைகளுக்கு எப்படி வரும் ....? அப்படியே வந்தாலும் ..ஊரான் பிள்ளைகள் மட்டும் இவர்கள் படங்களை உண்மை என்று நம்பி வாழ்கையை தொலைக்கவேண்டும் ...இவர்கள் பிள்ளை நல்லா இருக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? .....இவர்கள் மட்டும் கமல் போல காதலிப்பார்கள் ..ஆனால் பிள்ளைகளை மட்டும் கமல் போல அவர்கள் போக்கில் விடமாட்டேன் என்பது என்ன நியாயம் .?.

இதை சொல்லும் அதே வேளையில் ..

கன்பூயூஸ் ஆயிட்டேன் ..ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரேன்

கோபு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக