தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஆகஸ்ட், 2013

சனி நீராடு!!


சனி நீராடு" என்று ஔவையார் சொல்லியிருக்குறார் என்று நினைச்சு இன்று சனிக்கிழமை நீராடி விட்டு வந்தால்...."சனி நீராடு" என்பதன் அர்த்தம் சனிக்கிழமை தலைக்கு குளிப்பது என்பது இல்லையாம்...

சரி அதன் பொருள் என்ன என்று சற்று விளக்கமாக பார்ப்போமா....?

" சனி நீராடு " என்னும் ஆத்திசூடிப் பாடலுக்கு இதுவரை " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என்பதும் , " குளிர்ந்த நீரில் குளி ' என்பதும் பொருள்களாகக் கூறப்பட்டு வந்தன.ஆனால்
பரிமேலழகர் " சனி " என்னும் சொல்லுக்குக் " காரி " என்று பொருள் கொள்கிறார். காரி என்றால் விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு " வைகறையில் நீராடு " என்று உரை எழுதியுள்ளார்.

ஆகவே இனிமேல் எல்லோரும் அதிகாலையில் நீராடுங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக