தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

ஒட்டியாணம்...!!!


ஒட்டியாணம்...!!!

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடையில் / இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி

ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கும், வாடகைக்கும் கிடைக்கின்றன. சில ஒட்டியாணங்கள் எளிமையானங்கள் வடிவமைப்புக் கொண்டவையாக இருக்கும் அதே வேளை, நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட ஒட்டியாணங்களும் உள்ளன. வேலைப்பாடுகளைப் பொறுத்து ஒட்டியாணங்களின் மதிப்பும் வேறுபடும். தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது. இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக