தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

அந்த ஆறாவது ஆள் யார்? கர்ணன் தான்.


வியாசர் தந்த  மகாபாரதம் அவரில்லை என்றதும் எப்படியெல்லாம் மாறுகிறது!!உண்மைக்கு இடமே இங்கு இல்லை!!

ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…
DROWPATHI LIKES THE 6TH MEN … MAHABHARAT

அந்த ஆறாவது ஆள் யார்? கர்ணன் தான்.

முதன் முதலில், சுயம்வரம் நடந்த சபையில் வில்லை வளைத்துக் குறியை அடிக்க எழுந்தவன் கர்ணன்தான். அவனைப் பார்த்ததுமே இவன்தான் எனது புருசன் என்று திரௌபதி மனசில் தீர்மானமாகிவிட்டது. (அவனால் வில்லை வளைக்க முடிந்தும் அம்பு தொடுக்க முடியாமல் போனதால் தோற்றான்!அவன் அரச குமாரனில்லை 
என்பதே வியாசர் சொன்னது,தேரோட்டி மகன் என்பதால் அனுமதி கிடைக்காத இடம் ராஜ குமாரர்களுக்காக நடைபெற்ற போட்டி இடம் இந்திரப்பிரகஸ்தத்தில் என்று நினைக்கிறேன்.பிராமண வடிவில் இருந்த அர்ச்சுனன் யாருமே வெல்லாத நிலையில் அதாவது யாரானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற பின்னே கலந்து கொண்டான்!!)தேரோட்டி மகன் என்றிருந்ததால் அவனுக்கு வில்லைத்தொட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கர்ணனே அவள் மனசில் இருந்தான் கடைசிவரையிலும், அர்ச்சுனன் எழுந்து பந்தயத்தில் வென்று பாஞ்சாலியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தாய் குந்தியிடம். அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அதை ஐவருமே சேர்ந்து உண்டு அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டாள். மாதா சொன்னது மகேசன் சொன்னதாக ஏற்று ஐவருமே அவளை மணந்து கொண்டார்கள். இது திரௌபதிக்கு இணக்கமில்லை. அதனால் அவள் ஒரு தந்திரம் செய்தாள்.

அரசு குமாரர்கள் அணியும் ஒரு ஜோடி  செருப்புகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வரச் செய்து வைத்துக் கொண்டாள். விளக்கு வைத்ததும் தனது அறை வாசல்படியருகே அந்தச் செருப்புகளை வைத்துவிடுவாள். அய்வரில் யார் வந்தாலும் மற்றவரில் யாரோ ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று திரும்பி விடுவார்கள். விடிகாலைப் பொழுதுதில் அந்தச் செருப்புகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுவாள். இப்படியே தினமும் செய்தாள் இது சரியாக வராது என்று அறிந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கொரு பெண்னைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டார்கள். அந்தப் பெண்களிடம் பிறந்தவர்களே உப பாண்டவர்கள் என்று யுத்தம் முடியும் தறுவாயில் பேசப்படுகிறவர்கள்.(அபிமன்யு அர்ஜுனனுக்கும் சுபத்ரைக்கும் பிறந்த மகன்!)

கர்ணனையே மனசில் கொண்ட திரௌபதி கடைசிவரை கன்னி கழியாதவளாக வாழ்ந்து தெய்வமானதாகக் கதை.


வியாசர் சொன்னது இது:பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் மலரை ஓட்ட வைக்க பாண்டவர்கள் உண்மைகள் சொல்கைசில் பாஞ்சாலி கண்ணனிடம் இருதிசில் கர்ணனை தான் விரும்பிய  விடயத்தை சொன்னபின்தான் ஓட்டியதாக உபகதை உண்டு!!ஆனால் கன்னி கழியாமல் வாழ்ந்தால் என்று எங்குமே இல்லை!அவளுக்கும் பிள்ளைகள் உண்டு!

செருப்புக்கதை தருமன் ஆவலுடன் கூடியிருக்கையில் அர்ச்சுனன் அவரசரத்தில் உள்ளே நுழைந்து பார்த்துவிட்டதால்   மீண்டும் அவ்வாறு நிகழாமலிருக்க ஏற்படுத்தப்பட்ட முடிவு!!பின்னர் நாய் சாபம் பெற்றது நீங்கள் அறிந்ததே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக