பெண் புத்தியே ’பெரும்’ புத்தி! – ஆய்வு முடிவு!
**************************
பெண் தாசர்களின் பித்தலாட்டம்!
ஞாபகசக்திக்கு முக்கியகாரணம் அக்கறை,மேலும் பயிற்சி மூலம் அதை வளப்படுத்தலாம்,பிரச்சனைகள் அதிகரிக்க மராத்தி பற்றிக்கொள்ளும்,இதை எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் சொல்லியிருக்க அமரிக்காவில் அமரிக்கப்பெண்களையும் ஆண்களையும் கொண்டு நடாத்தி கண்டறியப்பட்டு விடயத்தை காட்டி பெண்கள் அறிவாளிகள் என்கின்றனர் பெண்கள் தாசர்!!இது முழு உலகுக்கும் பொருந்துமா என்பது முதற்கேள்வி!!உங்கள் வீட்டில் நீங்களா உங்கள் மனைவியா புத்திசாலி என்பது அடுத்த கேள்வி?இதற்கு ஆராய்ச்சி எப்படி உதவுதோ!!பெண்களுக்கு பிரச்சனை குறைவு அதனால் ஞாபகசக்தி அதிகம் என்றால் ஏற்கலாம்,ஆண்களின் பிரச்சனையே பெண்கள்தானே!!பட்டினத்தார் அதனால்த்தான் பெண்களை துற என்றார்!!
‘பெண் புத்தி பின் புத்தி’ என்று நம்மூரில் சொல்வார்கள்… அதற்கு அர்த்தம், பின்னாளில் வரக் கூடியதையும் சிறப்பாக கணிக்கக் கூடியவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும்.
ஆம்.
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர்.
ஆய்வு முடிவு விவரம் இதுதான்:
ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக