தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 மார்ச், 2013

கல்லணையை கட்டியவர் ... சங்க கால மன்னரான .. கரிகாற் பெருவளத்தான் ...!!


கல்லணையை கட்டியவர் ... சங்க கால மன்னரான ..
கரிகாற் பெருவளத்தான் ...!!
கல்லால் கட்டப்பட்ட அணைகளில் ..'உலகில் பயன்பாட்டில் 
உள்ள பழமையான அணை இதுவே ..!!
இந்த அணை 1080 அடி நீளமும் 60 அடி அகலமும் , 15 முதல் 18 அடி உயரமும் 
உடையது . அணைக்கட்டுவதற்குப் பல வகைகளில் பயன் படும் பல்வேறு
இயந்திரங்கள் எதுவும் இல்லாத அந்த காலத்தில் ... செங்கல்லும் ., சிமெண்ட்டும்
பற்றி கூட கேள்வி படாத காலத்தில் தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது .
கடற்கரையில் நிற்கும் போது அலைகளால் அடித்து வரும் நீர் ..
காலுக்கடியில் உள்ள மண்ணை கரைத்து ..கவர்ந்து செல்கிறது .
அங்கு நிற்பவரின் பாதங்களுக்கு அடியில் உள்ள மணல் ஓடும் நீரால் ..
அரிக்க படுகிறது . அதனால் கால்கள் மண்ணிற்குள் புதைகிறது .
இத் தத்துவத்தை ..பயன் படுத்தி ..பள்ளம் தோண்டபடாமலேயே ..
பாறைகள் வேண்டிய அளவிற்கு இறக்கப்பட்டுள்ளன ..!!
முதலில் பெரிய பாறை கற்களை கொண்டு வந்து ..ஆற்றங் கரையின் மேல் இருந்து ..
உருட்டி ., உருட்டி ., ஆற்று நீரில் விழ செய்துள்ளனர் . புவி ஈர்ப்பு விசையின் .
காரணமாகவும் பாறையின் எடையின் காரணமாகவும் .. நீரோட்டத்தால் ..
மணற் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாகவும் .. நீரில் விழுந்த பாறைகள் ..
ஆற்று மணலில் அமிழ்ந்து கொண்டே போனது . இறுதியாக அப் பாறை கற்கள்
மணற் பகுதிக்கு அடியில் உள்ள களி மண் படிமத்தில் நன்கு அமிழ்ந்து போனதை ..
உறுதி படுத்திய பிறகு அதனையே அடித்தள மட்டமாக கொண்டு மீண்டும் கற்களை
உருட்டி அது நன்கு படிந்த பிறகு மேலும் பாறைகளை உருட்டி ஆற்றின் நீரோட்டத்தின்
அளவிற்கு அதிகமான உயரத்திற்கு ஒரு தடையை ..ஏற்படுத்தி அதனையே ..பாதை ஆக்கி
ஆற்றின் மறு கரை வரை பாறைகளை உருட்டி நிரவியே கல்லணை கட்டப்பட்டுள்ளது ..!!
(பொறிஞர் . மு .துரைராசன் , கல்லணை பக்கம் 42) இம்முறை தற்போதைய தொழில் நுட்பத்தின்
பெயர் " எண்டு ஆன் மெத்தட் " (End -On -Method ) பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னை
மாகாணத்தில் பாசன பொறியாளராக விளங்கிய சர்.ஆர்தர் காட்டன் என்பவர்
இவ்வணையை.. ஆராய்ச்சி செய்து இதன் கட்டுமான முறையை அறிந்து வியந்து உள்ளார் .
(பொறிஞர் . மு . துரைராசன் , கல்லணை பக்கம் 55) இவர்தான் காவிரியில் இருந்து ..
கொள்ளிடத்திற்கு பாயும் நீரை கட்டு படுத்தி திறந்து விட மதகு களை அமைத்தார் .
கல்லணை கட்டி இருக்கும் அமைப்பு முறையில் தான் தற்காலத்தில் துறை முகங்கள் ..
கட்டப்படுகின்றன .
கல்லணையின் சிறப்பு :- உலகில் இன்றும் பயன்பாட்டில் உள்ள இந்த மிக பழமையான
கல்லணை யானது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் . கல்லணையின் ஆங்கில பெயர் ..
Grand Anicut என்பதாகும் . மற்ற அணைகள் எல்லாமே கட்டப்பட்டுள்ள ஊரின் பெயராலும்
ஆற்றின் பெயராலும் அழைக்கப்படும் பொழுது .. இவ்வணை மட்டுமே கல்லணை என
அழைக்கபடுகிறது . கல்லனைக்கு அருகில் தற்போது பூங்கா அமைக்கப்பட்டு ..
சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது ...!!
இத்தனை சிறப்பம்சங்களோடு .. விளங்கும் ..கரிகாலன் கட்டிய கல்லணை ..
திருச்சிக்கு அருகாமையில் .. சுமார் 24 கி .மீ . ல் உள்ளது ..!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக