தக்காளி தோசை
தென்னிந்திய உணவுகளில் தோசை மிகவும் பிரபலமானது. நிறைய வீடுகளில் பெரும்பாலும் காலை வேளையில் தோசை தான் செய்வார்கள். அத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. அத்தகைய வெரைட்டியான தோசைகளை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த தோசையில் ஒரு வகையான தக்காளி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப்தக்காளி - 2பச்சை மிளகாய் - 3சீரகம் - 1 டீஸ்பூன்இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்உப்பு - 1 சிட்டிகைஎண்ணெய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் தக்காளி, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் கல்லில் எண்ணெய் தேய்த்து, பின் அதில் தோசை மாவை தோசை போல் ஊற்றி, தேவையான எண்ணெய் சேர்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தக்காளி தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக