தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 மார்ச், 2013

இதயத்தின் முடிச்சுகள் 108 அதில் ஒன்று உச்சந்தலையை பிளந்து செல்கிறது.


இதயத்தின் முடிச்சுகள் 108 அதில் ஒன்று உச்சந்தலையை பிளந்து செல்கிறது.
--------------
இதயத்தின் முடிச்சுகள் 108 அதில் ஒன்று உச்சந்தலையை பிளந்து செல்கிறது.அதன் வழியே மேலே செல்பவன் மரணமற்ற நிலையைஅடைகிறான்.மற்ற நாடிகளின் வழியாக வெளியேறுபவன் பல்வேறு கீழ் உலகங்களில் உழல்கிறான்(கடஉபநிடதம்2.3.16) என்கிறது
இதயம் என்பது பிராணனின் இருப்பிடம்,உணர்ச்சிகள்.செயல்பாடுகள் என்று வாழ்க்கையின் அனைத்தும் இ்ங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறது.(இந்த இதயம் என்பது லப் டப் என்று துடிக்கும் இதயமல்ல)இந்த இதயத்திலிருந்து 108 நாடிகள் புறப்படுகின்றன.இவற்றின் மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன.அனுபவங்கள் பெறப்படுகின்றன.இவற்றுள் ஒன்று உச்சந்தலை வழியாக செல்கிறது.இந்த உச்சந்தலையில் பிரம்மரந்திரம் என்ற வாசல் உள்ளது.இந்த பிரம்மரந்திரத்தின் வழியாக ஒரு நாடி செல்கிறது.இதன் வழியாக உயிரைவிடுபவன் மரணமற்ற நிலையை அடைகிறான்.மற்ற நுாறு நாடிகளும் மீதி பத்து வாசல்களுள்(2கண்,2காது,2மூக்கு துவாரம்,வாய்,.தொப்புள்,ஆசனவாய்,பிறப்புறுப்பு) ஏதாவது ஒன்றில் நிறைவுபெறுகிறது.இவற்றின் வழியாக உயிர்வெளியேறினால் மீண்டும் பிறவி வாய்க்கிறது.ஆசைகளற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியாக உயிரை வெளியேற்றமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக