சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூரில் மட்டும்
ஆறு திவ்ய தேசம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருட சேவைக்கு இந்த 11 பெருமாள்களும் எழுந்தருள்வர்.
இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் வந்து ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வர்.
அந்த 11 திருப்பதிகள் விவரம்.
1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோவில்
5. திருமணிமாடக்கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
இந்த 6 ஸ்தலங்கள் திருநாங்கூருக்குள்ளே இருக்கிறது.
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன் பள்ளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக