தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, March 6, 2013

பொப்பண்ண கோட்டை 2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டை!!


2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. 
******************** 
படத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம். படத்தில் தெரிகின்ற அந்த வட்டப் பகுதிதான் பொப்பண்ண கோட்டை.பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. படத்தில் தெரிகின்ற அந்த வட்ட வடிவிலான மண் கோட்டையானது 50 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இந்த அகலமான மண் கோட்டை மீதுதான் செங்கல்லால் ஆன நெடுமதில்(சுவர் ) முன்பு அமைந்திருந்தது. காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், புதுக்கோட்டை மக்களின் கட்டுமான தேவைக்காகவும் அந்த மதில்சுவர் முற்றாக அழிக்கப்பட்டது .தற்போது நீங்கள் படத்தில் பார்ப்பது அக்கோட்டையின் சுவடு மட்டும்தான்.

புதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே அக்கால புதுக்கோட்டை மக்கள் முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்க
ளிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.

பொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.

~ ૐ ♥ சிவ ♥ சிவ ♥ சிவ ♥ சிவ ♥ சிவ ૐ ♥ ~
╰─❀──❃──❋──❀──❃───❀───❀───❀──❀─╮
| ~ Ψ ~ ૐ ♥ நம ♥ சிவாய♥ போற்றி ~ ~ Ψ ~! |
| ~ |! Ψ ~ ૐ ♥ சிவன்சக்தி ♥ போற்றி ~ Ψ |
காத்தோடு போச்சு கலிகாலம் ஆச்சு 2012-2013
|! ~ Ψ ~ ૐ ♥ கல்கி ♥ நமஹா ~ Ψ ~! |
|! ~ Ψ ~ சிவ ♥ சிவ ♥ சிவ ~Ψ ~|
╰─❀──❃──❋──❀──❃───❀───❀───❀──❀─╮

1 comment: