தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, March 20, 2013

பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை



பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை

என் தாய்த் திருநாட்டு மக்களே! நண்பர்களே! என் இளமைச் செல்வங்களே! நம்முடைய இந்தத் தாய்த் திருநாடாகிய தேசியக்கப்பல் இதுவரைக்கும் லட்சக்கணக்கானோரை வாழ்க்கை எனும் பெருங்கடலிலிருந்து கரையேற்றி வந்துள்ளது. ஒளிமயமான நம்முடைய பண்டைக் காலத்திலிருந்து, பன்னூறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தோணி நம் வாழ்க்கைக் கடலில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தோணியின் உதவியினால் ஆயிரக்கணக்கானோர் முக்தி என்னும் மறுகரையை அடைந்துள்ளனர்.

ஆனால் இன்றோ! இந்தக் கப்பல் நம்முடைய தவறினாலோ என்னவோ சற்று பழுதடைந்துள்ளது. சிறிதே பழுதடைந்துள்ளது. துளைகளின் வழியாக நீர் உள்ளே கசிந்து கொண்டிற்குக்கிறது. அதற்காகக் கப்பலை குறைகூறிப் பழிக்க முடியுமா? காலங்காலமாக எது நமக்கு உதவி வந்ததோ, இவ்வுலகில் வேறு எந்தப் பொருளையும் விட எது நமக்காக அதிகமாகப் பாடுபட்டு வந்துள்ளதோ அதையா பழிப்பது? அதையா சபிப்பது? இது நேர்மைதானா? இது முறையா? நம்முடைய இந்தத் தாய்த் திருநாடாம் கப்பலில் தவறுகள் என்னும் துளைகள் விழுந்தால் அந்தத் துளைகளை, அந்தத் தவறுகளைச் செய்தவர்கள் யார்? நாம் அல்லவா? நம்முடைய இச்சமுதாயம் தானே?

எனவே நாமே முயன்று அந்தத் துளைகளை அடிப்போம். நமது அறிவை, சிந்தனையை அடைப்பானாக்கி கப்பலில் கண்ட துளைகளை நிரப்பிவிடுவோம். இதுவன்றி, ஒருநாளும் ஏச வேண்டாம். பழிக்க வேண்டாம். சமுதாயத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம் நமது நாட்டின் பண்டைய பெருமையைக் கண்டு அதன் உன்னதங்களை உணர்ந்து அதன் மீது தனியாக் காதல் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் உளமார நேசிக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அன்புக் குழந்தைகள் அல்லவா நீங்கள்? சீர்மையும் சீலமும் மிக்க நம் முன்னோர்களின் வழித்தோன்றல்கள் அல்லவா நீங்கள்? உங்களை விரும்பாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? உங்களை என்னால் சபிக்க முடியாது. உலகிலுள்ள எல்லா வாழ்த்துகளும் உங்களுக்கு உரித்தாகுக!என் அன்பிற்குகந்த மாணவச் செல்வங்களே! நான் என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய பணித் திட்டங்கள் என்ன என்பதை உங்களுக்கு விளக்குவதற்காக உங்கள் நடுவே வந்து அமரப் போகிறேன்.

என்பணித் திட்டங்களைக் கேட்ப்பீர்கலானால், ஏற்ப்பீர்கலானால் உங்களோடு நானும் சேர்ந்து தோளோடு தோள் சேர்த்து செயலாற்றக் காத்திருக்கிறேன். என் சொற்களைக் கேட்க மறுத்து, ஒரு வேலை இந்த நாட்டை விட்டு என்னை துரத்தினாலும் நான் என் தாய்த்திருநாட்டிற்கு திரும்பி வருவேன். திரும்பி வந்து நம்முடைய பழம்பெரும் நாடான தாய்நாடு என்னும் கப்பலில் தற்போது தோன்றியுள்ள துளைகளால் நாமெல்லாம் மெல்ல முழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பேன். மூழ்குவதானாலும் உங்களுடன் சேர்ந்து மூழ்குவேன். ஆனால் மறந்தும் தாய்நாட்டைப் பழிக்கும் சாபக்கேடுகள் நம்மிடம் எழவேண்டாம்.

நம் நாட்டுக் கல்வியில், ஆன்மீகக் கல்வி, உலக நடைமுறைக் கல்வி ஆகிய இரண்டிலும் நமக்கு பிடிப்பு இருக்க வேண்டும். உரிமை இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அடித்தளமாகக் கொண்டே நமது கல்வி உருவாக வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? சொல்லப் போனால் நாம் காணும் கனவு, பேசுகிற பேச்சு, நம்முடைய எண்ணம, வேலை எல்லாமே இதப் பற்றியதாகவே இருக்க வேண்டும். இல்லாமல் நம் இனத்திற்கு விடிவு தோன்றாது இன்று நீங்கள் பயின்று வரும் கல்வியில் சில நல்ல கருத்துகள் இருக்கலாம். இருப்பினும் இந்தக் கல்வியால் தீமைகளே பெருகியுள்ளது.

எவையெல்லாம் நல்லனவோ அவையெல்லாம் அடிபட்டு அடிமட்டத்திற்கு போய்விட்டன. முதலில் அது மனிதனை உருவாக்கும் கல்வியில்ல. எதிர்மறையான கல்வியாகவே அது முழுக்க முழுக்க அமைந்துள்ளது. எதிர்மறையானப் பயிற்சி மரணத்தை விட நாசம் செய்யக் கூடியது. குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அனுப்புகிறோம். அங்கே அது முதன் முதலாக கற்பதென்ன? என் தந்தை ஒரு முட்டாள், இரண்டாவதாக என் தாத்தா ஒரு பைத்தியக்காரன். மூன்றாவதாக ஆசிரியர்கள் அனைவரும் வேஷதாரிகள். போலி ஆசாமிகள். நான்காவதாக அக்குழந்தை அறிந்துகொள்வது நம் சாஸ்திரங்கள் அனைத்தும் புளுகு மூட்டைகள். அந்தக் குழந்தைக்குப் பதினாறு வயது ஆகும் போது அத்தகைய முரண்பட்ட கல்வியினால் அவனுக்கு நம்முடையது எதுவும் நல்லதாக தெரிவதில்லை. மறுப்புணர்ச்சியின் ஒரு மொத்த வடிவமாகவும், உயிரும் எலும்பும் இல்லாத ஒரு சதைப் பிண்டமாகவும் ஆகிவிடுகிறான்.

கல்வி என்பது மூளையே குழம்பிப் போகும் அளவிற்கு விஷயங்களை திணிப்பதல்ல. வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாதபடி ஒருவனது அறிவைக் குழப்புவதல்ல. நம்முடைய கல்வி நமது வாழ்கையை நல்ல விதமாக உருவாக்குவதாக, குறிக்கோளை நம்மிடம் உருவாக்குவதாக அமைய வேண்டும்.ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்துகொண்டாலே போதும். அவற்றின் வழி உன் வாழ்கையை, உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீயே நன்கு கற்றவனாகிறாய்.

நூல் நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்று விடாமல் படிக்கிற புத்திசாலியை விட நீயே மெத்தப் படித்தவனாக இருப்பாய்.வெறும் செய்திகளைத் தருவது தான் கல்வி என்றால் நூல் நிலையங்களே உலகில் மாபெரும் முனிவர்களாக இருக்குமே! கலைக்களஞ்சியங்களையே உண்மையை கண்டு கொண்ட ரிஷிகள் எனலாமே!

எனவே நாம் அமைக்கும் கல்வி நாடு முழுமைக்கும் பொதுவாக விளங்கும் கல்வியாக, ஆண்மீகத்தைக் கொண்டதாக, உலக நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அத்துடன் நம் கட்டுப் பாட்டிற்குள் நாமே அமைக்கும்படியான உரிமையும் நமக்கு வேண்டும். மேலும் தேசியப் பண்பாட்டிற்கு ஏற்றதாகவும், வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய பண்பாட்டுக் கல்வியாகவும் இருத்தல் அவசியம்
 

No comments:

Post a Comment