திருமண அடையாளமான தாலி என்பது மஞ்சள் கயிறு தான். கொடிசங்கிலி என்பது வெறும் ஆபரணமே. முன்னாளில் ஊர்கவுண்டர்-பெரியவீட்டுகார
வெறும் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி பயன்படுத்தினாலும் அது தாலியே. ஆனால் கயிறு இல்லாது மங்கல்யமும், தங்க செயினும் சேர்ந்தது தாலி ஆகாது.அது வெறும் ஆபரணம். அதில் எந்த புனிதமும் அடையாளமும் இல்லை. தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை
திருமண அடையாளமான தாலி என்பது மஞ்சள் கயிறு தான். கொடிசங்கிலி என்பது வெறும் ஆபரணமே. முன்னாளில் ஊர்கவுண்டர்-பெரியவீட்டுகாரர் திருமணத்தை அங்கீகரித்து தரும் ஓலை மடிக்கப்பட்டு மஞ்சள் கயிறில் கோர்த்து அணியபட்டது. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும். அந்த ஓலை சீக்கிரம் இற்று போனதால் கொங்கு குழாலரை கொண்டு தட்டான் செய்து பயன்படுத்தினோம். பின்னர் வசதி பெருக அது தங்கமாக மாறியது. எவ்வளவு மாற்றம் வந்தாலும் மஞ்சள் கயிறு என்பது மாறாததாக இருந்தது. ஏனெனில் அதுவே பாரதம் முழுக்க பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட மண அடையாளமாக இருந்தது.
வெறும் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி பயன்படுத்தினாலும் அது தாலியே. ஆனால் கயிறு இல்லாது மங்கல்யமும், தங்க செயினும் சேர்ந்தது தாலி ஆகாது.அது வெறும் ஆபரணம். அதில் எந்த புனிதமும் அடையாளமும் இல்லை. தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக