இந்த நிகழ்ச்சி விஞ்ஞானம் சொல்கிறது,மருத்துவர் சொன்னார் என்று போலிக்காரணம் சொன்னவர்களுக்கு செருப்படி தந்துள்ளது,மரபு நோய்கள என்பதெல்லாம் சும்மா உவ்வா!அப்படிச்சொன்ன்னால் ஆதாம் எவாளில் இருந்து பிறந்த முஸ்லீம்,கிறிஸ்தவர் அனைவரும் உறவினர்!நம்ம த
மிழா மரபுதான் அக்கா மகள்,அத்தை மகள்,மாமா மகள் என்று சொல்லி வைத்துள்ளது,அதைத்தான் செவ்விந்திய சமூகமும் செய்ததாக இங்கு குறிப்பிட்டுள்ளார்கள்,மாயா காலண்டருக்கு உரிய சமூகமும் இந்த செவ்விந்திய சமூகத்தின் ஒரு பிரிவே!ஜாதி என்று இங்கு பிதற்றுகிறார்களே,ஜாதி என்ற சம்ஸ்கிருத அல்லது இந்தி சொல்லின் தமிழ் என்ன?சொல்ல முடியாதவர்கள் ஜாதி பற்றி அறிவாளிகள் போல கதைப்பதை நிறுத்தினாலே ஜாதிப்பிரச்சனை தீர்ந்துவிடும்.
அன்று உழவன் உயர்ந்தவன்,காரணம் அவனே எல்லா உயிர்க்கும் உணவு கொடுப்பவன்.இன்று அவன்தான் பிச்சைக்காரன்.வேளாண்மை செய்வதால் வேளாளன் பின்னர் வெள்ளாளன் ஆனான்!!மற்றைய பெயர்களும் அவ்வாறே தொழில் குறித்தன!!வளர்ச்சியால் மேலும் பல உள் பிரிவுகள் உருவாக்கி அவை எதற்காக உருவாகின என்றே இன்று தெரியாமலே அழைக்கப்படுகின்றன.இது வரலாறு அறியாமல் விட்ட தவறே!!ஏந்த தொழிலும் குறைந்ததில்லை,ஆகவே எந்தப்பிரிவும் குறைந்ததில்லை.உணவு தருபவன் உயர்ந்தவன்,மற்றவர் அவன் பின்னால் செல்பவர்.இன்று அவனோ ஏழை,ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்வோர் கோடீஸ்வரர்,உயர்ந்தவர்.காலத்தின் கொடுமை இதுதான்.இன்றைய போக்கு தவறே அன்றி அன்றைய பிரிவுகள் காலத்தின் கட்டாயம்.இன்றும் மருத்துவர் மருத்துவத்துடன் சம்பந்தமுள்ளவரையும்ஆசிரியர் தன் தொழில் சார்ந்தவரையும்,அரசியல்வாதி தன் அரசியல் சார்ந்தவரையும் என்றே திருமணம் காதல் செய்கின்றனர்!!காரணம் அதுதான் சாத்தியம்.எல்லாமே பசி அதற்கான வருமானம் சார்ந்ததே!!குறைத்து பார்ப்பதே இரு சாராரும் செய்யும் தவறு.அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவுபவர்(தச்சர்,வண்ணார்,சமையற்கார பண்டாரம்.....) குறைவு என்றும் ஆடம்பர தேவைகளை தருபவர்(car company,computer engineer...)உயர்வு என்று என்னும் நிலை மட்டும் தவறு,மாறனும்.உழவன் உயர்ந்தவன்,அதை செய்யாமல் அந்த பெயரை தாங்குபவன் அவன் செய்யும் தொழிலுக்கு உரியவன் என்ற உண்மை புரியணும்.அப்போது உறவுக்குள் கல்யாணத்தின் அவசியம் புரியும். (தொடரும் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக