தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 அக்டோபர், 2012

முகப்பருவை குறைக்கும் எண்ணெய்கள்....



முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்கள் முதலில் இருக்கின்றன. அத்தகைய பருக்கள் முகத்தில் அதிக எண்ணெய் இருப்பதனால் ஏற்படுகிறது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ஏனெனில் அந்த எண்ணெய் இருப்பதால், முகத்தில் அழுக்குகள் படியும் போது, அவற்றை அப்படியே சருமத்தில் தங்க வைத்துவிடுகின்றன. பிறகு துளைகள் அடைக்கப்பட்டு, பிம்பிளாக மாறி, பின்னர் உடைந்து விடுகின்றன. ஆனால், சருமத்திற்கு எப்படியிருந்தாலும் சருமத்திற்கு ஏதேனும் எண்ணெய்கள் தேவைப்படுகின்றன.

இல்லையென்றால் சருமம் வறட்சியை அடைந்துவிடும். அதிலும் ஒரு சில எண்ணெய்கள் பயன்படுத்தினால், சருமத்தில் படியும் அழக்குகளை தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். இதனால் முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அந்த எண்ணெய்களைப் பயன்படுத்தினால், சருமம் நன்கு மென்மையோடு, இளமையோடு காணப்படும். இப்போது எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தினால், முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!
முகப்பருவை குறைக்கும் எண்ணெய்கள்
சந்தன எண்ணெய்: முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க இதுவரை சந்தன ஃபேஸ் மாஸ்குகளை தான் பயன்படுத்துவோம். இப்போது அதே சந்தனத்தால் ஆன எண்ணெய் கூட, அந்த ஃபேஸ் மாஸ்க்கின் பயனைத் தருகிறது. அதிலும் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு பெரும் காரணம், உடலில் வெப்பம் அதிகமாக இருப்பதாகும். ஆகவே இந்த சந்தன எண்ணெயை பயன்படுத்தினால், உடல் குளிர்ச்சியடைந்து, பருக்களை குறைத்துவிடும்.
கிராம்பு எண்ணெய்: முகப்பரு வந்து அதனை நீக்க, கைகளால் உடைத்து, அதனால் நிறைய பருக்கள் பரவினால், அப்போது கிராம்பு எண்ணெயை பயன்படுத்தினால், பருவில் உள்ள கிருமிகள் அழிந்து, பருக்கள் வராமல் இருப்பதோடு, பருக்களால் ஏற்படும் வடுக்களை எளிதில் நீக்கலாம்.
லாவண்டர் எண்ணெய்: முகத்தில் பருக்கள் ஏற்பட்டு, அதனால் முகத்தில் அதன் வடுக்கள் படிந்து, முகத்தின் அழகு கெட்டுவிட்டது போல் நீங்கள் வருத்தப்பட்டால், அப்போது அதனை நீக்க சிறந்த வழி லாவண்டர் எண்ணெய் தான். மேலும் இந்த எண்ணெயை முகத்திற்கு தடவி வந்தால், பருக்கள், அதனால் ஏற்படும் வடுக்கள் எளிதில் போவதோடு, முகத்தில் பளிச்சென்று அழகாக காணப்படும்.
ஜொஜொபா எண்ணெய்: சருமத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க பயன்படும் எண்ணெய்களில் ஜொஜொபா எண்ணெயும் ஒன்று. இந்த எண்ணெய் சருமத்தின் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுப்பித்து, சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, முகப்பருக்களை வராமல் தடுக்கும்.
ஆலிவ் எண்ணெய்: சருமத்திற்கு வைட்டமின் ஈ உள்ள எண்ணெய் என்றால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆன ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் படியும் அழுக்குகளை தங்க விடாமல் தடுப்பதோடு, சருமத்தை பொலிவோடும் வைக்கும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயிலும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. நிறைய மக்கள் இதனை பயன்படுத்தினால், பருக்கள் அதிகமாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் சரியாக இயங்கி, சருமத்தில் அழுக்குகள் தங்குவதை தடுத்து, முகப்பருக்களை வேரோடு அழித்துவிடும். மேலும் இது உடலில் உள்ள ஹார்மோன்களை சரியாக இயக்குவதால், பருக்கள் ஏற்படாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக